பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது10. வட்டம் சுற்றி ஓட்டம்ஆட்ட அமைப்பு : 20 அடி விட்டமுள்ள ஒரு வட்டத்தை முதலில் போட வேண்டும். ஆட விரும்புகின்ற அனைவரையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களையெல்லாம் வட்டக் கோட்டின் மேல் ஆங்காங்கே பரவலாக நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.


இதற்கிடையில் வட்டத்தின் மையத்தில் ஒரு வரை நிற்க வைத்திட, ஒருவரைத் தேர்ந்தெடுத்து மையத்தில் நிறுத்திட வேண்டும். அவர் கொஞ்சம் சுறுசுறுப்பானவராக இருந்தால் நல்லது. ஏனெனில், அவரால் தான் ஆட்டமே தொடங்கி வைக்கப்படுகிறது.


நடுவில் நிற்பவரிடம் பந்து ஒன்று இருக்க வேண்டும். அல்லது பந்து போன்ற அமைப்புள்ள, ஏதாவது உருண்டையான பொட்டலம் ஒன்று இருந்தாலும் போதும். அதாவது,எந்தப் பொருளாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் தூக்கி எறிந்துப் பிடிப்பது