பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37



போன்ற பொருளாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் தூக்கி எறிந்துப் பிடிப்பது போன்ற பொருளாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஆடும் முறை: மையத்தில் பந்துடன் நிற்பவர், தான் யாருக்கு எறிய வேண்டும் ஏறிய வேண்டும் என்று விரும்புகிறாரோ. அவரை கோக்கி முதலில் பந்தை எறிய வேண்டும். தன்னை நோக்கிப் பந்து வருவதை உணரும் ஆட்டக்காரர், பந்தை பிடித்து கொண்டு, உடனே எறிந்தவருக்கே அனுப்பி விட்டு, ஒடத் தொடங்க வேண்டும். -

மத்தியில் நிற்பவர் அந்தப் பந்தைப் பிடித்த வுடனே பந்தைக் கையில் வைத்தவாறு, ஒடியவர் இருந்த இடம் நோக்கி, அவர் ஒடுகிற திசை பக்க மாகவே ஒடித் தொட முயல வேண்டும்.

அதற்குள், வட்டம் சுற்றி, ஒடத்தொடங்கியவர்: தொடப்படாமல் தான் முன்னே நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து நின்று விட்டால், மீண்டும் ஆட் டத்தைத் தொடர, முன்னர் ஆட்டத்தின் மத்தியில் நின்றவரே, முன்னர் விளக்கியது போல, பங்தை. எறிந்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

அவர் தொடப்பட்டால், மத்தியில் நின்றவர் ஆட்டக்காரராக மாற, மத்தியில் நின்றவர் தொடப்பட்டவர் இடத்திற்கு வந்து நிற்க, மீண்டும் ஆட்டம் தொடரும்.