பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42



மானது. மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, கட்டாயமும் இல்லை.

அந்த ஆட்டம் முடியும் வரை, அந்த எண்ணைத்தான் அவர் பயன்படுத்திக்கொண்டு ஆடிட வேண்டும் என்பதால், அந்த எண்ணை நன்றாக நினைவு படுத்திக்கொண்டிருக்கவேண்டும். அவ்வளவுதான்.


ஆடும் முறை: சுமார் 20 அல்லது 25 அடி வட்டமுள்ள ஒரு பெரிய வட்டம் ஒன்றைப் போட்டு எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்கிறார்களோ, அத்தனை சிறு சிறு வட்டங்களாக வட்டத்தைச் சுற்றிலும் போட்டிருக்கவேண்டும்.


அதாவது, வட்டக் கோட்டில்தான் சிறு வட்டம் போடவேண்டும். அதில் ஒவ்வொரு ஆட்டக்காரர்களும் சென்று நின்றுகொள்ளவேண்டும்.


அதில் ஒருவர் மட்டும், அதாவது முன்கூட்டியே நடுவில் நிற்பதாக இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்படுகின்றவர், வட்டத்தின் மையத்தில் போடப்பட்டிருக்கும் சிறு வட்டத்தில் வந்து நின்று கொள்ள வேண்டும். இவ்வாறு மையத்தில் வந்து நிற்பவருக்கும் ஒரு ஆட்ட எண் (Number) உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.


ஆட்டம் தொடங்கலாம் என்ற சைகைக்குப் பிறகு நடுவில் நிற்பவர் சத்தமாக, ஏதாவது இரண்டு எண்களைக் கூப்பிட வேண்டும். (உம்-6,8). இந்த