பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. தட்டு நடை

ஆட்ட அமைப்பு : கைவசம் இருக்கின்ற தட்டுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆட்டத்தை மாற்றி அமைத்துக் கொண்டு ஆடலாம். விருந்துக்குப் பயன்படுத்துகின்ற தட்டுக்கள் கிடைக்காவிடில், கனம் அதிகம் இல்லாத செங்கல் அல்லது கட்டைகளையும் இந்த ஆட்டத்தில் பயன்படுத்திக் கொண்டு ஆடி மகிழலாம்.


16 தட்டுக்கள் தான் கைவசம் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம், அப்பொழுது நான்கு நான்கு ஆட்டக்காரர்களாகப் ’பிரித்து வைத்து, ஒரு முறை இந்தத் தட்டு நடைப் போட்டியை நடத்திக் கொள்ளலாம்.


முதலில் நடக்கத் தொடங்கும் கோடு (starting Line) ஒன்றைப் போட்டு, அதிலிருந்து 30 அல்லது 35 அடி தூரத்திற்கு அப்பால், நடந்து முடிக்கும் கோடு (Finishing Line) ஒன்றைப் போட்டு வைத்துக் கொண்டு, போட்டியைத் தொடங்கலாம்.