பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

 ஆடும் முறை: ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் இரண்டு தட்டுக்கள் தரவேண்டும். அந்தத் தட்டுக்களுடன், ஒவ்வொரு ஆட்டக்காரரும் நடக்கத் தொடங்கும் கோட்டில் வந்து நிற்க வேண்டும். ஆட்டத்தை நடத்துபவரின் சைகைக்குப் பிறகு ஆட்டக்காரர்கள் நடக்கத் தொடங்க வேண்டும்.

முதல் தட்டை தங்கள் முன்னே வைத்து. அதில் ஒரு காலை வைத்து, அடுத்த தட்டை அதற்கு முன்னால் வைத்து அடுத்துக் காலை வைத்து, பிறகு முதல் தட்டை எடுத்துக் கொண்டு அதற்கும் முன்னே வைத்து, முன்போல் முதல் காலை வைத்து இப்படியாகத் தட்டை எடுத்து எடுத்து மாற்றி மாற்றி வைத்து, முன்னேறிச் செல்ல வேண்டும். -

தட்டின்மீது கால் வைத்துத்தான் நடந்து செல்ல வேண்டும். தரையின் மீது காலை ஊன்றினாலும் அல்லது தடுமாறிப் போய் கீழே விழுந்தாலும் கூட அவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்

இவ்வாறு சரியான முறையில் தட்டின்மீதே, நடந்து யார் முதலில் எல்லைக் கோட்டை அடைகின்றாரோ அவரே வெற்றி பெற்றவராவார்.

குறிப்பு : போட்டியைத் தொடங்கும் பொழுது கையில் இரண்டு தட்டுக்கள் இருப்பது