பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. மூக்குக்கூடு 

விளையாட்டு அமைப்பு ;

முன் விளையாட்டில் கூறியதுபோல, விளையாட வருகின்றவர்களை சம எண்ணிக்கை அளவில், 4 குழுக்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். 40 பேர்கள் இருக்கின்றார்கள் என்றால், குழுவிற்கு 10, என்பதாகப் பிரித்து விடவேண்டும்.

பிறகு, ஒவ்வொரு குழுவையும் 3 அடி இடை வெளி இருப்பதுபோல வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நிறுத்திவைக்கவும். எதிரே 30 அடி தூரத்தில் நீண்டகோடு-4 குழுக்களும் நிற்பதற்கு இணையாக (Parallel இருப்பது போல் குறிக்க வேண்டும். 1 * : , ,

ஒவ்வொரு குழுவின் முதலில் நிற்பவர்களுக்கு தீப்பெட்டிக் கூடு குச்சிகள் உள்ள உட்பகுதி நீக்கப்பட்டது. ஒவ்வொன்றும் தரப்பட வேண்டும். அவர் அந்த தீப்பெட்டிக் கூட்டினை மூக்கின் முற்பகுதிகளில்