பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது19. ஒற்றைக்கால் பந்தாட்டம்

.


ஆட்ட அமைப்பு : விளையாட விரும்பும் அனைவரும் இந்த ஆட்டத்தில் பங்கு பெற்று மகிழலாம்.

குறிப்பிட்ட இடத்தில் தான் நின்று ஆட்டத்தைத் தொடங்கவேண்டும். நின்ற இடத்தில் சிறு கோடு ஒன்றைக் கிழித்து அடையாளம் முதலில் செய்து கொள்ள வேண்டும்.

அந்த இடத்திலிருந்து 40 அல்லது 50 அடி தூரத்தில், 2 அடி விட்டமுள்ள ஒரு வட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். -

ஆட்டத்தில் பயன்பட ரப்பர் பந்து அல்லது பிளாஸ்டிக் பந்து ஒன்றும் வேண்டும். கிடைக்க வில்லையென்றால், சில் என்பார்களே ஒட்டாஞ்சில், அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.