பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64



விளையாடும் முறை : ஆடஇருப்பவர், எல்லைக் கோட்டின் மேலே ஒற்றைக்காலில் (ஒரு காலைத் துரக்கியவாறு மறுகாலில் நிற்பது) நிற்கவேண்டும். அந்தக் கோட்டில் பந்து அல்லது சில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

விசில் சத்தத்திற்குப் பிறகு, அவர் நொண்டியடித்தபடியே அந்தப் பந்தை எத்தி, எதிரே உள்ள வட்டத்திற்குள் கொண்டு போய் நிறுத்திட வேண்டும். -

வட்டத்திற்குள் பந்தைக் கொண்டு போய் நிறுத்துவதுதான் ஆட்டத்தின் முக்கிய நோக்கம்.

விளையாட்டின் விதி முறைகள் :

1. எக்காரணத்தைக் கொண்டும் மறுகாலை தரையில் ஊன்றக் கூடாது. ஒற்றைக் காலால்தான் பந்தை உதைத்து ஆட வேண்டும்.

2. எத்தனை முறை வேண்டுமானலும் பந்தை எத்தித் தள்ளலாம். ஒவ்வொரு முறை எத்தும் பொழுது, எத்துவது எத்தனையாவது முறை என்பது குறித்துக் கொள்ளப்படும்.