பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20. மனித யானை ஒட்டம்


ஆடும் அமைப்பு

விளையாட விரும்புகின்ற குழந்தைகள் அனைவரும் இந்த ஆட்டத்தில் பங்குபெறலாம். ஆட்டத்தை நடத்துபவர் விளையாட இருக்கும் குழந்தை களை சம எண்ணிக்கையுள்ள நான்கு குழுவினர்களாக பிரிக்க வேண்டும். பிறகு 20 அடி நீளமுள்ள நேர் கோடு ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும். 5 அடி தூரம் இடைவெளி இருப்பது போல நான்கு குழுவினரையும் தனித்தனியாக நிறுத்த வேண்டும்.

ஒவ்வொரு குழுவிலும் உயரமானவர்கள் முன்னால் நிற்க, அவருக்கு அடுத்தடுத்து உயரம் குறைந்தவர்கள் பின்னால் நிற்க வேண்டும் என்பது தான் நிற்கும் முறையாகும். அந்த நான்கு குழுவினர்க்கும் முன்புறமாக 50 அடி தூரத்தில் ஒரு நேர் கோடு போட்டிருக்கவேண்டும்.