பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பொழுது புலர்ந்தது

கொண்டு எங்கள் பால் அநுதாபங்காட்ட ஆரம்பித்து வருவதைக்கண்டு சர்க்கார் பயந்துதான் இப்படி அவசர மாகக் கைதுசெய்து விட்டார்களோ என்று எண்ண வேண்டி யிருக்கிறது -என்று குறிப்பிட்டதுதான் காரணமோ ?

பத்து வருஷங்களுக்கு முன் காந்தி-இர்வின் ஒப்பங் தம் ஏற்பட்ட காலத்தில் சர்ச்சில் ‘காந்திக்கு விட்டுக் கொடுப்பது என்பதை கான் எதிர்க்கிறேன். அவருடன் பேசுவதையும் ஒப்பந்தம் செய்வதையும் எதிர்க்கிறேன், அவர் கம்முடைய வியாபாரத்தை இந்தியாவிலிருந்து சாஸ்வதமாக விரட்டி விடுவதற்கே முயன்று கொண்டு இருக்கிறார் என்றைக்கேனும் ஒருநாள் காந்தியின் கொள் கையைப் பிடித்து நசுக்கிவிடவேண்டும் என்பதே நாம் அறியவேண்டிய உண்மையாகும்” என்று கூறினரே அதுதான் காரணமோ?

எந்தக் காரணமாயிருந்தாலும் சர்க்கார் ஆகஸ்ட் ஒன்பதாந்தேதி காலை கைது செய்துவிட்டார்கள். மறு காள்முதல் காட்டில் ஹர்த்தால் கண்டனக் கூட்டங்கள் போன்றவை கடந்ததோடு அஹிம்சா தர்மத்திற்கு விரோதமான பலவிதமான காரியங்களும் நடைபெற்றன. ஏதோ சில காங்கிரஸ்காரர்கள் விஷயம் தெரியாமல் கலந்திருந்தாலும் பொதுவாகக் காங்கிரஸ்காரர்கள் எல் லோரும் அஹிம்சா விரோதமான காரியங்களைக் கண்டு வருந்தவும் கண்டிக்கவும் செய்தார்கள்.

அவைகளே அடக்குவதற்காக அரசாங்கத்தார் கை யாண்ட அடக்குமுறை பிரிட்டிஷ் நண்பரான லூயி பிஷர் கூட அச்சு நாட்டாரிடம் காட்டவேண்டிய வீரத்தை எல்லாம் அடிமை காட்டாரிடம் காட்ட ஆரம் பித்து விட்டார்களே ‘ என்று எண்ணும்படி அவ்வளவு கடுமையானதாக யிருந்தது.