பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியடிகளின் உபவாசம் 97

கள். பாரதத் தாயின் நெஞ்சம் முழுவதும் கலங்கிவிட்டது. இப்படித் திடீரென்று காந்தியடிகள் எழுபத்து காலாவது வயதில் இருபத்தொருநாள் உபவாசம் இருக்க வேண்டியதின் காரணம் யாது?

காந்தியடிகள் தம்மைக் கைதிசெய்த ஐந்தாவது நாள் (14-8-42) அன்று வைசிராய்க்கு ஒரு கடிதம் எழுதினர்:"எங்களைக் கைதி செய்ததற்கு தங்கள் காரணங்கள் சரியாயில்லை. கிர்வாக சபையிலுள்ள இந்திய மெம்பர் களும் சம்மதித்ததாகக் கூறுகிறீர்கள். இந்த தேசத்தில் அத்தகையோர் எளிதில் கிடைப்பர் என்பதுதான் அதன் பொருள். அதுவும் நாங்கள் உடனே சுதந்திரம் வேண்டும் என்பதற்கு ஒரு காரணமாகும்.

நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் நான் செய்திருந்த பிரசங்கங் களைப் படித்துப் பார்த்திருந்தால் நான் உடனே சட்ட மறுப்பு ஆரம்பியாமல் தங்கட்கு முதலில் கடிதம் எழு தவே உத்தேசித்திருந்தேன் என்பதைத் தெரிந்திருப்பீர் கள். அத்துடன் நீங்கள் சட்டமறுப்பு ஆரம்பமாகும் வரையாவது பொறுத்திருந்திருக்க வேண்டும். உங்கள் அவசரம் உலக மகா ஜனங்கள் எங்கள் பால் அநுதாபங் கொள்ள ஆரம்பித்து வருவது கண்டு நீங்கள் பயந்துவிட் டீர்கள் என்பதையே காட்டுகிறது.

பரிபூரண சுதந்திரம் கேட்பது எப்படித் தவறு ?

தவருல்ை பொறுமையாக எங்களுக்கு விஷயத்தை விளக்குவதா? அதை விட்டு உடனே அடக்குமுறையைக் கையாளுவதா? சுதந்திரம் கேட்ட மாத்திரத்தில் குழப்பம்

உண்டாய் விடுமா ? சுதந்திரம் கேட்டவர்களே கைதி செய்தது கானே குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது ?

பலாத்காரமான காரியங்கள் செய்ய அபாயகரமான ஏற்பாடுகள் நடந்திருந்தால் உடனே ஏன் ஏற்பாடு செய்த

563—7 H