பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பொழுது புலர்ந்தது

வர்களை கைதி செய்யவில்லை ? எப்பொழுதும் அஹிம்சா தர்மமே காங்கிரஸின் கொள்கை. அது பலாத்காரமான காரியங்களேச் செய்ய எண்ணவேயில்லை. அது எதையும் ரகசியமாகவும் செய்வதில்லை. எங்கள் கோரிக்கைக்கு உங்களே இணங்கும்படி செய்வதற்குப் போதுமான தியா கத்தைச் செய்வதே காங்கிரஸின் நோக்கமாகும்.

பூரண சுதந்திரம் தேவையென்று கூறிக்கொண்டு காங்கிரசை எதிர்ப்பதற்காகப் பல கட்சிகள் காளான்கள் போலத் தோன்றுவதும் சர்க்கார் ஆதரவு பெறுவதும் சகஜமாய்விட்டன. ஆனல் சுதந்திரம் அளித்தாலன்றி ஒற்றுமை உண்டாகாது. தேசத்தின் கோரிக்கையைக் கூறுபவனே உயிரோடு புதைத்து விட்டதால் முட்டுக் கட்டை தீர்ந்துவிடவில்லை, அதிகப்படவே செய்திருக் கிறது. அதனல் தங்கள் கொள்கையைப் புனராலோசனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன் “.

இந்தக் கடிதத்துக்கு லின்லித்கோ பிரபு சர்க்கார்மீது கூறும் கண்டனத்தை ஏற்றுக்கொள்ளவும் சர்க்கார் கொள்கையைப் புனராலோசனை செய்யவும் முடியா தென்று பதிலெழுதினர்.

மகாத்மா காந்தியடிகளின் கடிதத்தை சர்க்கார் உடனே வெளியிட்டிருந்தால் ஜனங்கள் தாங்கள் அவசரப் பட்டு காரியங்கள் செய்யப் புறப்பட்டது பிசகு என்றும், அஹிம்சைக்கு விரோதமான காரியங்கள் காங்கிரவின் கொள்கைக்குப் புறம்பானவை என்றும் அறிந்துகொண் டிருப்பார்கள். அஹிம்சா விரோதமானகாரியங்கள் ஐந்து நாள் வாழ்வோடு மடிந்து போயிருக்கும். அரசாங்கம் கடிதத்தை வெளியிடாத காரணம் யாதோ?

அதன் பின் செப்டம்பர் 23-ம் தேதி காந்தியடிகள் * சர்க்கார் என் கடிதம் வரும்வரை காத்திருந்தால் இந்தத் தவறுகள் நடைபெற்றிரா. காங்கிரஸின் கொள்கை