பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமது கிலேமை 3

“ இந்தியாவில் ஒவ்வொருவர்க்கும் சராசரியாகக் கிடைக்கக் கூடிய உணவு சென்ற 30 வருஷ காலத்தில் ஒன்றுக்கு முக்காலாகக் குறைந்துவிட்டது” என்று கூறுகிரு.ர்.

உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு

என்பது நமது வள்ளுவர் வாக்கு. அவ்விதமின்றி இப் பொழுது நமது ஜனங்கள் எப்பொழுதும் பசியால் வாடி வதங்கி வருவதால் உலகில் என்ன என்ன பிணிகள் உண்டோ அவைகள் எல்லாம் இங்கு வந்து சாஸ்வதமாகக் குடியேறிவிட்டன.

அமெரிக்க அரசாங்கம் அனுப்பிய டாக்டர் கிரான்ட் என்பவர் ஆண்டு தோறும் இந்தியாவில் மலேரியா வில்ை இறப்பவர் 15 லட்சம்-காலராவில்ை இறப்பவர் 1 லட்சம்-வைசூரியினல் இறப்பவர் , லட்சம்; ஆனல் காங்கள் ஆண்டுவரும் பிலிப்பைன் தீவில் இந்த மூன்று நோய்களாலும் இறப்பவர் கிடையவே கிடையார்” என்று கூறும்பொழுது நம்முடைய மனம் என்ன பாடு படுகின்றது? ஆமாம், பிலிப்பைன் தீவினர் அமெரிக்க ருடைய ஆட்சியில் 50 வருஷ காலத்தில் அடைந்த “ துர் அதிர்ஷ்டம் ‘ அது!

இப்படி நோய்கள் பெருகி வருவதைத் தடுக்கவோ குணப்படுத்தவோ வைத்தியர்கள் உண்டா? இங்கிலாங் தில் ஜனத்தொகையில் ஆயிரத்துக்கு ஒரு வைத்தியர் இருக்க இந்த புண்ய பூமியில் பதியிைரத்துக்கு ஒருவரே உளர். அதனுல்தான் சமீபத்தில் பெஷாவரில் நோயாளி யாய் சர்க்கார் ஆஸ்பத்திரியில் இருந்து நேரில் அனுப வித்து அறிந்த நிக்கோலஸ் என்னும் அமெரிக்க கிருபர்,

‘ஆஹா ! இந்தியாவா? அதுதானே நோய்க் கிருமி களின் சொர்க்க லோகம்!"