பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியடிகளின் உபவாசம் 103

ஆயிரக்கணக்கான ஸ்தாபனங்கள் காந்தியடிகளை உடனே கிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று வைசிராய்க்குத் தந்தி கொடுத்தன. ஒன்று பாக்கியின்றி சகல பத்திரிகைகளும் அதையே வற்புறுத்தி எழுதின. வங்காள சட்டசபை, மத்திய சட்டசபை, ஸிலோன் சட்ட சபை எல்லாம் விடுதலைத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைத்தன. உலகத்தைக் கலக்கத்தக்க வேண்டு கோள் விடுக்கக்கூடிய என் தந்தையார் இல்லாமல் போய் விட்டாரே’ என்று தாகூரின் குமாரர் வருந்தினர். இந்தியா விலுள்ள பிரதம பிஷப்பும் வங்காள பிரதம மந்திரியும் சேர்ந்து காந்தியடிகளுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கொண்டார்கள். வைசிராயின் நிர்வாக சபையிலிருந்த மூன்று இந்திய மெம்பர்கள் உடனே விடுதலை செய்யாததற்காக ராஜிநாமாச் செய் தார்கள். இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னுப்பிரிக்கா முதலிய தேசங்களில் இருந்தும் வேண்டுகோள் வந்து குவிந்தன. பிரிட்டிஷ் சர்க்காரை ஆதரிக்கும் பிரதம லண்டன் பத்திரிகை டைம்ஸாம்கூட இந்த நிலைமை யாருக்கும் திருப்தி அளிக்கவில்லை, இப்போதும் சந்தித்துப் பேசலாமே ‘ என்று எழுதிற்று. சென்ற மகா யுத்தத்தில் பிரிட்டிஷ் பிரதம மந்திரியாயிருந்த லாயிட் ஜார்ஜும் பிரிட்டிஷ் பிரதம பாதிரியாரும் காந்தியடிகளுக்கு என்ன நேருமோ என்று கவலைப்பட்டார்கள். தேசத்தின் சகல பாகங்களிலிருந்தும் பிரிட்டிஷ், ஹிந்து, முஸ்லிம், பார்ஸி ஆகிய சகல வகுப்புக்களையும் சேர்ந்த பிரபலமான தலை வர்கள் முன்னுாறு பேர் டெல்லியில் மகாநாடு கூடி விடு தலைத் தீர்மானம் கிறைவேற்றி உடனே வைஸ்ராய்க்கும் சர்ச்சிலுக்கும் அனுப்பி வைத்தார்கள்.

இத்தனே வேண்டுகோளுக்கும் வைசிராயும் சர்ச்சி அலும், விடுதலே செய்ய முடியாது, உபவாசத்தின் பொறுப்