பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

சர்க்காரின் குற்றச்சாட்டு

வைசிராய் லின்லித்கோ பிரபு 1942 ஆகஸ்டு 11-க் தேதி முதல் நடந்த காரியங்களுக்குக் காங்கிரஸ்ே காரணம் என்று காந்தியடிகளுக்கு எழுதினர். அதற்கு காந்தியடிகள் காங்கிரஸ் அல்ல காரணஸ்தர், காங்கிர ஸைக் கடிதம் எழுதிச் சமரஸம் பேச இடங்கொடாமல் அவசரப்பட்டுக் கைதி செய்த கவர்ண்மெண்டே என்று பதில் எழுதினர். அதன் மேல் வைஸி ராய் நீங்களே அட்டுழியங்கள் செய்ய ஏற்பாடு செய்தீர்கள் என்பதற் குப் போதிய சான்றுகள் உள என்று கூறினர். அப்படி யானுல் உடனே கைதி செய்திருக்க வேண்டாமா, இப் பொழுதேனும் எங்களை விசாரணை செய்தால் என்ன என்று காந்தியடிகள் கேட்டார்.

சான்றுகள் இருப்பது உண்மையானல் சர்க்கார் கோர்ட்டு மூலம் விசாரணை செய்ய ஏற்பாடு செய்வது தானே நியாயம் ! ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாமல் டாட்டன்ஹாம் என்ற உத்யோகஸ்தரைக் கொண்டு காங்கிரஸ் மீது குற்றம் சாட்டி ஒரு அறிக்கை தயாரித்து வெளியிட்டார்கள்.

அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மூன்று :

(1) காங்கிரஸ் பலாத்காரச் செயல்களுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தது.

(2) தேசீய சர்க்கார் அமைத்து ஆதிக்கம் செலுத்த

ஆசைபபடடது.