பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்காரின் குற்றச்சாட்டு 107

(3) ஜப்பானுடன் சமரஸம் செய்து கொள்ளத் தயாராயிருந்தது.

ஸாப்ரூ முதலிய மிதவாதத் தலைவர்கள் காங்கிரஸ் காரர்களில் சிலர் கலந்து கொண்டார்கள் என்பதைக் கொண்டு காங்கிரஸே ஏற்பாடு செய்தது என்று கூற முடியாது என்றும், சர்க்காரிடம் சான்றுகள் இருந்தால் கோர்ட்டு பரிசீலனை செய்து கூறும் தீர்ப்பையே ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறினர்கள்.

பிரிட்டிஷ் பத்திரிகை கல்கத்தா ஸ்டேட்ஸ்மன் “ காங்கிரஸ் பெரிதும் வெகு காலமாகவுள்ளதும் அதிகக் கட்டுப்பாடுள்ளதுமான ஒரு ஸ்தாபனம். அதன் தலைவர்கள் அறிவு மிகுந்தவர்கள். அத்தகைய சபையார் பல வாரங்களாக பலாத்காரத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் என்பதும், அப்படி ஏற்பாடு செய் தவர்கள் தங்களைக் கைதி செய்து விட்டால் அதன் பின் நடக்க வேண்டிய காரியங்களைத் திட்டம் செய்யாமல் இருந்து விட்டார்கள் என்பதும் நம்பக்கட்டியதாகத் தோன்றவில்லே ‘ என்று எழுதியது.

காங்கிரஸ் தேசிய சர்க்காரில் ஆதிக்கம் செலுத்த விரும்பியதாகக் கூறுவது சரியா? காந்தியடிகள் வைளி ராய்க்கு எழுதிய கடிதத்திலேயே எங்கட்காக கேட்க வில்லை, யார் வேண்டுமானலும், ஜின் னு சாகிபே யான லும் அமைக்கட்டும், எங்கட்குச் சம்மதமே என்று கூற வில்லையா ? கிரிப்ஸ் துரைக்கும் ஆஸாத்தும் அப்படியே எழுதினரல்லவா? அப்படி யிருக்க இந்த அபாண்டமான பழியைக் கூறுவானேன்?

காங்கிரஸ் ஜப்பானுடன் சமரஸம் செய்து கொள்ள விரும்பியது போல் கூறுவதும் சரியா? ஜப்பான் பிலிப் பைன் தீவுகளைத் தாக்கிய பின்னர்தான் பிரிட்டிஷாருக்கு ஜப்பான் காரியம் கசக்கலாயிற்று. அதுவரை அவர்கள்