பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்காரின் குற்றச்சாட்டு 109.

உத்தேசம் இப்பொழுதில்லை என்று கூறினர். அதை அறிந்ததும் அமரிக்கர் லூயி பிஷர் காங்கிரஸை அழித்துவிட வேண்டுமென்று எண்ணித்தான் இப் பொழுது விசாரணை இல்லை என்கிறீர்களோ “ என்று கேட்கலாஞர்.

ஆகவே காங்கிரஸ் மீதும் காந்தியடிகள் மீதும் பழி சுமத்துவதும், சான்றுகள் கொண்டு கோர்ட்டில் நிரூபி யுங்கள் என்று கேட்டால் இப்பொழுதில்லை என்று கூறுவதும்தான் பிரிட்டிஷ் கியாயம் போலும் !

இப்படி அமரியும் வைஸி ராயும் கோர்ட்டு ஏற்படுத்தி விசாரனே செய்ய ஏற்பாடு செய்யாவிட்டாலும் அந்த விஷயத்தைக் குறித்து கோர்ட்டு விசாரணை நடக்காமல் இருக்கவில்லை.

டில்லி ஜில்லா மாஜிஸ்ட்ரேட் ‘'அட்டுழியங்கள் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அனுமதித்த காரியத் திட்டத்தில் சேர்ந்தவை என்பதற்குச் சான்றுகள் தரப் படவில்லை.” என்று ஒரு வழக்கில் நீர்ப்புக் கூறினர்.

வார்தா ஜில்லா ஜட்ஜ்-” காங்கிரஸ் சட்ட மறுப்பு ஆரம்பிக்குமாறு தீர்மானம் செய்ததாகவோ அல்லது சட்ட மறுப்பு ஆரம்பிக்குமாறு ஜனங்கட்கு ரகசிய தாக்கிது விடுத்ததாகவோ நிரூபிக்கப்படவில்லை. யாரோ சில காங்கிரஸ்காரர் அட்டுழியங்களில் கலந்து கொண்ட தைக் கொண்டு சட்ட மறுப்பியக்கம் கடப்பதாகவும் அதைக் காங்கிரஸ் ஆரம்பித்ததாகவும் தீர்மானிப்பது நியாயமாகாது ‘ என்று தெளிவாகக் கூறினர்.

இவர்கள் இருவரும் காந்தியடிகள் கேட்ட பட்ச பாதமற்ற கோர்ட்டார் அல்லர், பிரிட்டின் சர்க்காரின் நீதிபதிகள். இவர்களே இப்படிச் சொல்வதானுல் விஷயம் முழுவதையும் விசாரணை செய்யச் சம்மதியாமல் காங்கிரஸ் மீது வீண் பழி சுமத்துவது எள்ளளவேனும் நியாயமாகுமா ?