பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பொழுது புலர்ந்தது

என்று லண்டனிலுள்ள ஸண்டே கிராணிக்கள் பத்திரிகைக்குத் தந்தி அடித்தார். என்னே நம்முடைய அதிர்ஷ்டம் !

இந்தியாவில் கோய் அதிகமாவதற்கு முக்கிய கார ணம் பசியே என்று எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். அத்துடன் நோய்க்கு சிகிச்சை செய்ய வசதியுமில்லை. அதல்ை குழந்தைகள் பிறந்து ஒரு வருஷ மாவதற்குள் ஆயிரத்தில் 66 மட்டும் இங்கிலாந்தில் இறக்க, இங்கே 274 இறக்கின்றன. ஆதலால் சராசரி வயது இங்கிலாந் தில் 62. இந்தியாவில் 26.

நமது பொருட் செல்வ நிலைமைதான் இப்படி என்றால் கல்விச் செல்வ கிலேமை எப்படி? நூறு வருஷங்கட்கு முன் சர்க்கார் பாடசாலைகள் கிடையா, நமது சுதேச பாடசாலைகளே இருந்தன. அப்பொழுது

“ ஜனத்தொகையில் ஆயிரம் பேர்க்கு ஒரு பாடசாலை, ஆல்ை இப்பொழுது அதுவுமில்லே “

என்று சென்னையில் பிஷப்பாக இருந்த டாக்டர் ஒயிட்ஹெட் கூறுகிறார், அக்காலத்தில் இந்தியாவி லிருந்த பாடசாலைகள் போன்ற பாடசாலைகள் இங்கிலாங் தில் கிடையா என்று சர்க்கார் ரிப்போர்ட் தயாரித்த ஆதம் துரை கூறுகிரு.ர்.

இப்பொழுதோ ஜனங்களில் நூற்றுக்கு 90 பேர் கிரட்சரகுட்சியாய்விட்டார்கள். ஆனல் இந்த எழுத்து வாசனையின்மை 50 வருஷ அமெரிக்க ஆட்சியின் பயனுய் பிலிப்பைன் தீவில் 98 சதமானத்திலிருந்து 45 சதமானத் துக்கும் 20 வருஷ ஸோவியத் ஆட்சியின் பயனுய் ரஷ்யாவில் 73 சதமானத்திலிருந்து 8 சதமானத்துக்கும் குறைந்திருக்கிறது.

இப்படி பசி-பிணி-கல்வியின்மை நாளுக்கு நாள் பெருகி வருவதன் காரணம் என்ன ?