பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்புச் சட்ட அமுல் 115

கள். இதிலிருந்து இந்தியப் பாதுகாப்புச் சட்டம் இந்தி யாவை எதிரியிடமிருந்து பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டதா அல்லது பிரிட்டிஷ் அதிகாரத்தை இந்தியரிடமிருந்து பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டதா என்று கேட்க வேண் டியதாய் இருக்கிறது.

சாதாரணமாகவே இந்திய சர்க்கார் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை. அதற்காகவே காங்கிரஸ் கமிட்டியார் சுதந்திரமும் , தேசீய சர்க்காரும் வேண்டு மென்று கேட்டார்கள். அப்படியிருக்க அப்பொழுது சர்க்கார் ஜனநாயக வேஷமுங் கூட இல்லாமல் சுய சர்வாதிகாரமாகவே நடந்து வந்தார்கள். வைஸி ராய் இயற்றும் அவசரச் சட்டத்துக்கும் சட்டப்படி சட்டம்’ என்றுதான் பெயர். ஆனல் உண்மையில் அவர் இட்டது தான் சட்டம். அவர் இஷ்டப்பட்டு விட்டால் எவ்வித சுதந்திரமும் இல்லாமல் செய்துவிட முடியும். ஏதேனும் பாதுகாப்பு கோர்ட்டுக்கள் அளிக்குமோ என்று எதிர் பார்த்தால் அலகாபாத் ஹைகோர்ட்டு பிரதம நீதிபதி “ இந்தியப் பாதுகாப்புச் சட்டம் எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாமல் செய்துவிட்டது” என்று ஒரு வழக்கு நடக்கும் சமயம் வருத்தத்துடன் கூறினர். பெட ரல் கோர்ட்டு ஏதேனும் ஒரு விதியைத் தவறு எனக் கூறினல் உடனே வைஸி ராய் அது தவறு அன்று என ஒரு அவசரச் சட்டம் செய்துவிடுகிறார். ஆகவே நாம் ஹெச். ஜி. வெல்ஸ் என்னும் ஆங்கில அறிஞருடன் சேர்ந்து இந்திய சர்க்கார் எதேச்சாதிகாரி யில்லாத எதேச்சாதிகாரம்’ என்று கூறலாம். சட்டப்படியே அவசரச் சட்டம் செய்வதால் சட்டப்படி எதேச்சாதி காரம் ஆகாது, ஆனல் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் செய்துவிடுவதால் அது எதேச்சாதிகாரமே யன்றி வேறன்று.