பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்புச் சட்ட அமுல் 117

மட்டுமே சமரஸ்ம் பேசச் சம்மதிக்கமுடியும் - என்று பதில் எழுதியிருந்தார்.

அதைக்கண்ட ராஜாஜி-’ சர்க்காருக்கு சமாளலம் செய்யப் பிரியமில்லை. அது மட்டுமா, அவர்கள் காங்கிரஸ் சபையை அடிபணியச் செய்யவேண்டுமென்றும் எண்ணு கிறார்கள். அப்படியிருக்காது அவர்களுடைய நோக்கம் என்று எண்ண எத்தனே தடவை முயன்றாலும் அதுவே தான் என்ற எண்ணம் என் மனத்தில் எழுந்துகொண்டே இருக்கிறது ‘ என்று அபிப்பிராயம் கூறினர்.

வைஸி ராய் பேட்டி முறை வகுத்ததையும், பதில் அளித்ததையும் கண்டு, நாடெங்கும் அதிருப்தி உண்டா யிற்று. மனக்கசப்பும் கண்டனமும் எழுந்தன. தலைவர் கள் மகாகாடு காந்தியடிகளை விடுதலை செய்யும்படிகூடக் கேட்கவில்லை, பேசி வருவதற்கான அனுமதியை மட்டுமே கேட்டது. அதைக்கூட சர்க்கார் மறுத்து விட்டார்கள். அதற்குக் காரணம் யாது? சர்க்கார் மெம்பர் சட்ட சபையில் காந்தியடிகளைக் கலகக்காரர்’ என்று கூறி னரே, அதுதான் காரணமோ? அதற்கு ஸாப்ரூ மிதவாதி கள் மகாநாட்டில், --

‘ மகாத்மாஜி கலகக்காரரா? அப்படித்தான் ஸ்மட் ஸாம் டிவாலராவும் கலகக்காரர்களா யிருந்தார்கள். இன்று ஸ்மட்ஸ் தென் ஆப்பிரிக்காவின் பிரதம மந்திரியாயும் சர்ச்சிலின் வலது கையாயுமிருக்கிரு.ர். டிவாலரா இப்போது ஐர்லாந்தின் பிரதம மந்திரி. அவர் நம்மைவிட்டுப் போய்விடக் கூடாதே என்று சர்ச்சில் சதாகாலமும் கவலையோடிருக்கிறார். பிரிட்டிஷ் சர்க்கார் சமாஸம் பேசுவதெல்லாம் ராஜபக்தர்களுடன் அன்று, கலகக் காரர்களுடனேயேதான். இங்கும் கலகக்காரர் களுடன் சமரஸம் செய்யாமல் இருக்கப் போவதில்லை,