பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது கிலேமை 5

சுமார் 60 வருஷங்கட்கு முன் ஆங்கில நாட்டிலிருந்த ஜான் ப்ரைட் என்னும் அறிஞர். பார்லிமெண்டு சபையில்

‘’ இந்தியதேசம் நீர்வளம் நிலவளம் கிறைந்தது. இந்திய மகாஜனங்கள் அறிவும் ஊக்கமும் உடையவர். அப்படியிருந்தும் அந்த தேசம் இப்படிக் கேவலமாயிருப்ப தன் காரணம் யாது ?”

என்று கேட்டுவிட்டு அதற்கு அவரே

“ அந்த நாட்டில் நடைபெறும் அரசாங்க முறையே தான் காரணம்” என்று விடையும் பகர்ந்தார்.

“ ஆமாம், நமது கேவலமான கிலேமைக்கு மூல கார ணம் நாம் 200 வருஷங்களாக சுதந்திரமிழந்து ஆங்கிலே யர்க்கு அடிமைகளாய்விட்டதே என்பதில் சந்தேகமில்லை. இதை இக்காலத்தில் மறுப்பார் யாருமிலர்.

இந்த உண்மையை உணர்ந்தே 60 வருஷங்கட்கு முன்னர் நமது பெரியார்கள் காங்கிரஸ் மகாசபையை நிறுவினர்கள். அது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரவே 1906ம் வருஷத்தில் காங்கிரஸ் மகா சபையில் தலைமை பூண்ட நமது தாதாபாய் கெள ரோஜி

“ ஸ்வராஜ்யமே நமது தேவை ” என்று சுதந்திரக் கொடியை உயர்த்தினர். அடுத்த வருஷம் கமது பால கங்காதர திலக மகரிஷி

“ ஸ்வராஜ்யம் நமது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவோம்” என்று தேசம் முழுவதும் சங்க நாதம் முழக்கினர்.

அதன்பின் மகாத்மா காந்தியடிகள் வந்து காங்கிரஸ் மகாசபையை நாடெங்கும் பரவுமாறு செய்து, ஜய மின்றித் தோல்வியறியாத சத்தியாக்ரகம் என்னும் சுதந்திர சாதனத்தை அளித்து, புத்துயிரும் புதுபலமும்