பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லின்லித்கோ சாதித்தவை 123.

கலந்து பேச இடம் தராமல் இருப்பதின் காரணம் என்ன ?

அவர் சாதித்ததாகக் காட்டுவதை நாம் ஒப்புக் கொள்ளமுடியாவிட்டாலும், அவர் ஒன்றுமே சாதிக்க வில்லே என்று கூறிவிட முடியாது. சாதாரண ஜனங். களும் தெரிந்துகொள்ளக் கூடிய விதத்தில் சாதித்துள்ள வைகள் உண்டு.

கிரிப்ஸ் துாதைத் தோல்வியுறச் செய்ததும், காங்கி ரசைச் சிறையில் வைத்ததும், என்றுமில்லாத அடக்கு முறைகளேக் கையாண்டதும், எப்பொழுதும் சர்க்காருக்கு ஆதரவளித்து வந்த மிதவாதிகளைக் கூட மனம் கசக்கு மாறு செய்ததும், போர் நிகழுங் காலமாயினும் ஆஸ்தி ரேலியா, அயர்லாந்து, அமெரிக்கா, முதலிய நாடுகளில் எல்லாம் சட்டசபைகளுக்குப் புதிதாகத் தேர்தல் நடை பெற்றிருக்கக் காங்கிரஸின் பலம் உலகமறிந்து விடும் என்று பயந்து இங்குமட்டும் போர்ச் சமயம் என்று சாக்குச் சொல்லித் தேர்தல் நடத்தாமல் ஜனநாயகத்தைக் குழிவெட்டிப் புதைத்ததும் இவர் இந்தியாவுக்குச் செய்த மகத்தான சேவைகள் அல்லவா?

லாகூரில் கூடிய முஸ்லிம் மகாகாட்டில் என்னையும் வைஸ்ராய் காந்திக்கு கிகராக மதித்து விட்டாரே, என்ன ஆச்சரியம் ‘ என்று ஜின்ன சாஹிபே பிரமித்துக் கூறும் வண்ணம் முஸ்லிம் லீக்குக்கு அதன் தகுதிக்கு அதிகமான பெருமையைக் கொடுத்ததும், ஒன்றுக்குப் பத்தாக ஹிந்து முஸ்லிம் வேற்றுமைக்கு உயிர் கொடுத்து ஏகாதிபத்தியத் துக்கு காயகற்பங் கொடுத்து வந்ததும் அவற்றைவிடப் பெரிய காரியங்கள் அல்லவா?

இவைகள் எல்லாம் ஜனங்களுக்குத் தெரியாவிட்டா அலும் இவருடைய தர்ம ராஜ்யாதிகாரத்தில் என்றும்