பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

ஸரோஜனி தேவியார்க்குத் தடை

காங்கிரஸ் காரியக் கமிட்டி மெம்பர்களில் நோயா யிருந்த சரோஜனி தேவியார் 1944 ஜனவரி 26-ம் தேதி, லாகூர் சென்றபொழுது, பத்திரிகைப் பிரதிநிதிகள் சர்க் காருடைய குற்றச்சாட்டுகளைப்பற்றி கேட்டபொழுது, அவர் ‘ சர்க்கார் கூற்று உண்மைக்கு விரோதமானது. அதிகாரம் வேண்டும் என்று கேட்டோம். அதற்காக சத்யாக்கிரகம் செய்ய விரும்பினுேம். ஆயினும் அதை ஆரம்பிக்குமுன் அரசாங்கத்துடன் மறுபடியும் சமரசம் பேச எண்ணினுேம், சர்க்கார்தான் அவசரப்பட்டு விட் டார்கள், காந்தியோ காங்கிரஸோ ஒருநாளும் அஹிம் ஸையிலிருந்து பிறழ்ந்து நடக்க எண்ணியதில்லை. காந்தி யடிகளை ஜப்பான் ஆள் என்று கூறுவது சுத்தப் பொய். அவர் ஆகஸ்டுத் தீர்மானத்துக்கு முன் மே மாதத்தி லேயே ஸ்லேட் அம்மையார், ஜப்பான் வந்தால் என்ன செய்வது என்று கேட்டதற்கு, எதிர்க்கவேண்டும் என்று பதில் எழுதியிருந்தார், ஆனல் சர்க்கார் அதைத் தடுத்து வைத்துக்கொண்டார்கள். அப்படியிருந்தும் அவர்கள் காந்தியடிகளே ஜப்பான் பக்தரென்று கூறுவது எவ் வளவு விபரீதமான செயல் ? இப்பொழுதும் காரியக் கமிட்டியாரைச் சந்திக்க காந்தியடிகளுக்குச் சந்தர்ப்பம் அளித்தால் ஏதேனும் விமோசன மார்க்கம் தோன்றாமல் போகாது. ஆனல் காங்கிரஸ் கொள்கைக்கு விரோத மான சமரசம் செய்ய ஒருநாளும் சம்மதிக்க முடியாது “ என்று கூறினர்.