பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பொழுது புலர்ந்தது

அவ்வளவுதான் உடனே சர்க்கார் அவர் இனிமேல் அரசியல் விஷயமாகப் பேசவுங்கூடாது, அறிக்கைவிடுக்க வுங் கூடாது, என்று தடை உத்திரவு போட்டுவிட் டார்கள். காங்கிரஸின் கொள்கை இதுதான் என்று ஐயம் திரிபறக் கூறக்கூடியக் காரியக்கடிட்டியாரில் இவர் ஒருவரே சிறைக்கு வெளியே இருக்க, அந்தக் கொள்கை யைக் கூறக்கூடாது என்று அவர் வாயை அடைப்பது எவ்வளவு அநீதி !

அவர் கூறியதில் ஏதேனும் குற்றமான விஷயம் உண்டா? பலாத்காரமோ அல்லது சட்டவிரோதமான செயலோ செய்யச் சொல்லவுமில்லை. சர்க்காரின் யுத்த முயற்சிகளுக்குத் தடை செய்யவுமில்லை.

அதற்குப் பதிலாக அவர் கூறியது அஹிம்ஸா தர் மத்தை உறுதிசெய்வதாகவும், ஜப்பான எதிர்க்கவேண் டும் என்ற உணர்ச்சியை வளர்ப்பதாகவும் சமரசத்திற்கு வழிகோலுவதாகவுமே இருந்தது.

ஆல்ை அதே சமயம் அவருடைய பேச்சு சர்க்கார் கூற்றுக்கள் எல்லாம் வெறும் வேஷம் என்று உலகத்துக் குக் காட்டிவிட்டதை சர்க்கார் பொறுக்க முடியுமா? அத்துடன் அவர்களுக்குச் சிக்கலேத் தீர்க்கவேண்டும் என்ற ஆசையும் கிடையாதல்லவா? சரோஜனிதேவியா ரைத் தடைசெய்ததேன் என்று மத்திய சட்டசபையில் கேட்டபொழுது சர்க்கார் மெம்பர் மாக்ஸ்வெல், தேவியார் கூறியதைக் காட்டியதோடு அவர் 26-4-4ல் சுதந்திரப் பிரதிக்ஞை செய்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத் தாரே அந்தப் பிரதிக்ஞை ராஜத்துரோகமானது என்ற காரணத்தையுங் கூறினர்.

சுதந்திரப் பிரதிக்ஞை ராஜத் துரோகமானதா? சுதந் திரம் கடவுள் தரும் பிறப்புரிமை. அதைக்கேட்பது ராஜத் துரோகமால்ை, அதைக் கேட்கக் கூடாது