பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேவல் பிரசங்கம் 137

“ அநேகமாக, நாட்டிலுள்ள, சகல ககதித் தலைவர் களும் காங்கிரஸ் கமிட்டியாரையும் காந்தியடிகளையும் விடுதலே செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு விட்டார்கள். விடுதலை செய்தால் விபரீதம் விளையும் என்ற காலம் கடந்துபோய் விட்டது. இனி ஒரு நிமிஷ மும் தாழ்த்தலாகாது. என்னேப்போன்றவர்களும்கூட சர்க்காரின் தவறுகளைப் பகிரங்கமாகக் கண்டிக்க வந்து விட்டார்கள் என்றால் சர்க்கார் எப்பொழுதும் தன்னைத் தாங்கிப் பேசுவோர் உட்பட சகல ஜனங்களுடைய கம்பிக்கையையும் படிப்படியாக இழந்து வருகின்றது என்பதுதான் பொருள் ‘ என்று எவ்வளவு பச்சையாகக் கூற முடியுமோ அவ்வளவு பச்சையாகக் கூறினர்.

மத்திய சட்டசபை மார்ச்சு மாதம் கூடியபொழுது காங்கிரஸ், முஸ்லிம்லீக், தேசியக் கட்சி மெம்பர்கள் அனை வரும் ஒன்று சேர்ந்துகொண்டு வைசிராயின் நிர்வாக சபையிடம் நம்பிக்கையில்லே என்று கூறி இந்தியப் பாதுகாப்புச் சட்ட அமுலேக் கண்டித்தார்கள். சர்க்கார் கொண்டுவந்த நிதி மசோதாவையும் கிராகரித் தார்கள்.

இப்படிச் சர்க்காரைக் கண்டிக்கும் விஷயத்தில் காங்கிரசுடன் முஸ்லிம்லீக் சேர்ந்துகொண்டதிலிருந்தும் ஏழெட்டுத் தேர்தல் மெம்பர்களே சர்க்காருக்கு ஒட்டுச் செய்தார்கள் என்பதிலிருந்தும், இந்த சர்க்கார் எப் பொழுது மாறுமோ என்று எல்லோரும் ஒருப்போல் எண்ண ஆரம்பித்தார்கள்.

1944 பெப்ரவரி மாதம் அன்னை கஸ்துாரிபாய் அவர்கள் தெய்வம் ஆனர்கள். அதன் பின் ஏப்ரல் மாதத் தில் காந்தியடிகளுக்குச் சுகமில்லை என்ற செய்தி வெளி யாயிற்று. நாடெங்கும் ஒரே கவலே குடி கொண்டது.