பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பொழுது புலர்ந்தது

காந்தியடிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று சகல பாகங்களிலிருந்தும் வைசிராய்க்கு வேண்டுகோள் போய்ச் சேர்ந்தன. சர்க்கார் யோஜனை செய்து கடைசி யாக மேமாதம் 5-ம் தேதி காலையில் விடுதலை செய்தார்கள். அன்னே கஸ்துாரி பாய் நோயாய் இருந்த பொழுது விடுவிக்க மறுத்து சிறையிலேயே உயிர் நீக்க விட்ட சர்க்கார் மகாத்மா காந்தியடிகளே விடுவித்து விட்டது. ஏன் ? சமரச நோக்கத்தோடு தான் விடுவித்திருக்கிறார் கள், அதனுல் காங்கிரஸ் கமிட்டியாரையும் விடுவித்து விடுவார்கள், சமரச சம்பாஷணை ஆரம்பமாகும் என்று அநேகர் எண்ணினர்கள். அதன் பேரில் இந்தியாவி லும் இங்கிலாந்திலும் எல்லோரையும் உடனே விடுவித்து விடும்படியாகக் கேட்க ஆரம்பித்தார்கள்.

பிரிட்டிஷ் சர்ச்சுகளின் சங்கத்தாரும் பிரிட்டிஷ் தொழிற்கட்சி பார்லிமெண்ட் மெம்பர்கள் பலரும் அமரி யைப் பேட்டி கண்டு காங்கிரஸ் தலைவர்களே விடுவிக்கும் படியும் சட்ட சபைகளுக்குத் தேர்தல் நடத்தும்படியும் கேட்டுக் கொண்டார்கள்.

ஆனல் அமரி துரை காந்தியை நோய் காரணம் பற்றியேதான் விடுவித்திருக்கிருேம், எல்லோரையும் விடு விக்க வேண்டுமானல் வைஸி ராய் கூறிய கிபந்தனை பூர்த்தி செய்யப்படக் காணுேம் என்று பழைய கதையையே கூறினர்.

அமரியின் “ அண்ணு ‘ சர்ச்சில் துரை பார்லிமெண்டு சபையில் ‘ தேசங்கள் கொள்ளையடிக்கப் புறப்படுவதை அடியோடு கிறுத்தியே திர வேண்டும். ஆளுல் இதற்கு முன்னுல் தேடி பரம்பரையாக அனுபவித்து வரும் சந்தோஷங்களுக்கு உரிமை கிடையாது என்று சொல்லுவ தாக எண்ண வேண்டாம் ‘ என்று கூறினர்.