பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

ஜின்னுவின் போக்கு

ஜின்ன சாஹேப் ஆதியில் முஸ்லீம்களுக்கு சிறு பான்மையோர்க்கு உரிய விசேஷப் பாதுகாப்பு மட்டுமே கோரினர். அதன்பின் அரசியல் வாழ்வில் முஸ்லிம்கள் சிறுபான்மையோரா யிருந்தாலும் அவர்களுக்கு இக்துக் களுடன் சரிசமமான அந்தஸ்துக் கொடுக்கப்படவேண் டும் என்றார், அப்பால் போர் துவக்கியதும் வைசிராய் காந்தியடிகளுக்குக் கொடுத்த அந்தஸ்தை அவருக்கும் கொடுத்து அவரை தாம்ஸன் துரை கூறுவதுபோல “ ஒரு முஸ்லிம் மகாத்மா’ ஆக்கியதும் அவரே பிரமித்துப் போய் பிறகு பிரக்ஞை வந்ததும் அப்படியால்ை இனி மேல் இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு சமூகங்கள், நாட்ட்ைப் பங்கிட்டுக் கொள்வோம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். ஆனல் பாக்கிஸ்தான் தீர்மானம் செய்த சில மாதங்களுக்குள் ஆஸாத் முஸ்லிம் மகாநாடு அல்லாபக்ஷ் சாஹேப் தலைமையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பிரதிநிதிகளுடன் டெல்லியில் கூடி முஸ்லிம் விக் ஒன்றே முஸ்லிம்களின் பிரதிநிதி என்பதை மறுத் தும், நாட்டைப் பிரிக்கும் யோஜனேயைக் கண்டித்தும் திர்மானங்கள் நிறைவேற்றியது. அதைக்கண்டு முஸ்லிம் லிகர்கள் பயந்துபோனர்கள். ஆனல் ஜின்ன சாஹேப் அணுவளவும் அதைரியப்படாமல் விடாப்பிடியாகத் தம்முடைய புதிய யோஜனேயை அடிமேல் அடியாகக் கூறிக்கொண்டே இருந்தார். சர்க்கார் கவர்னர்களும் சூழ்ச்சிகள் செய்து அஸ்ஸாம், எல்லேப்புறம், ஸிந்து,