பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பொழுது புலர்ந்தது.

ஆனல் யார் என்ன சொன்னலும் ஜின்ன சாஹேப் முஸ்லிம்களில் ஒரு பகுதியாரை சுதந்திர இயக்கத்தில் கலந்துகொள்ள விடாமல் தடுப்பதும், தேசம் சுதந்திரம் அடைய ஒட்டாமல் முட்டுக்கட்டை போட்டு நிற்பது மாகிய இரண்டு பெரிய காரியங்களைச் செய்து வந்தார்.

இந்த முட்டுக்கட்டையை எந்தத் தச்சன் செய்திருந்த போதிலும் எந்த மகான் அதை நம்முடைய சுதந்திரப் பாதையில் போட்டுப் பிடித்துக்கொண்டிருந்த போதிலும் முட்டுக்கட்டை முட்டுக்கட்டைதான். அதை விலக்க வேண்டியது அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது. -

காங்கிரஸ் சுதந்திரம் தாருங்கள், ஒற்றுமை உண் டாய்விடும் என்று சர்க்காரிடம் கூறுகிறது.

ஆளுல் சர்க்கார் அது முடியாது ஒன்று சேர்ந்து வந்தால்தான் தருவோம் என்கிறார்கள்.

அதல்ை காங்கிரஸ் ஜின்ன சாஹிபை பார்த்து நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று கேட்டால் அவர் நாட்டைப் பிரியுங்கள், ஒன்று சேர்ந்து வருகிறேன் என்று கூறுகிறார்,

அதற்குக் காங்கிரஸ், காட்டை இரண்டாய்ப் பிரிப்ப தெப்படி, எந்த விதத்திலும் நன்மையாகாதே, அந்த யோஜனையை விட்டு விடுங்கள், உங்களுக்குப் போது மான பாதுகாப்புத் தருகிருேம், அதுவும் போதா தென்றால் கியாயமான சுயநிர்ணய உரிமையையுங்கட்ட அரசியல் அமைப்பில் சேர்த்துக்கொள்வோம் என்று கூறுகிறது.

காங்கிரஸ் கூறும் இந்த நியாயமான யோஜனே களுக்கு ஜின்ன சாஹேப் என்ன கூறுகிறார்? இப் பொழுது உள்ள சர்க்காரை மாற்றி தேசீய சர்க்கார் அமைக்க வேண்டியது அவசரமான காரியம் என்று