பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பொழுது புலர்ந்தது

பொழுது ஜனநாயக முறையை அனுஷ்டிப்பதாகக் கூறும் அவர்கள் மத்ய சட்டசபைகளைக் கலந்துகொள்ள வேண் டும் அல்லவா? வேண்டும்தான், ஆனால் அப்படிச் செய்யவில்லை.

அது போலவே போர் என்று சேம்பர்லேன் கூறி வாய் மூடுமுன் வைஸி ராயும் “ஆம், இந்தியாவும் ஜெர்மனி யுடன் போர்தான் “ என்று பிரகடனம் செய்து விட்டார். அவர் மத்ய சட்டசபைகளையும் கலந்து கொள்ளவில்லை. மாகாணங்களிலிருந்த மந்திரிகளையும் கலந்து கொள்ள வில்லை.

அது மட்டுமா? பிரிட்டன் தாய்-கானடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலியன குழந்தைகள். தாய்க்குப் போர் என்றால் குழந்தைகளுக்கும் போராகும். ஆல்ை அந்த நாடுகள் எல்லாம் நம்முடைய வைஸி ராயைப் போல் அவசரப்படவே இல்லை. சட்ட சபைகளுடன் கலந்து கொண்டு ஐந்தாறு நாட்களுக்குப் பின்னரே போரில் இறங்கின. அயர்லாந்து அப்படியும் செய்யாமல் * நடு நிலைமை “ என்றே கூறி விட்டது.

ஜனப்பிரதிநிதிகளைக் கலந்து கொள்ளாமல் சண்டை யில் சேர்ந்ததன் கருத்து யாது? ஜனப்பிரதிநிதிகளில் முக்கியமானவர்கள் காங்கிரஸ் மந்திரிகள், அவர்களிடம் சர்க்காருக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது அவர்களே லட்சியம் செய்ய வேண்டியதில்லை என்று எண்ணி விட் டார்களா?

எந்தக் காரணமானலும் வைஸி ராய் செய்தது தவறு. காங்கிரஸ் மகா சபை பல வருஷங்களாகவே ஹிட்லர் முஸலோனி இருவர்களுடைய கொள்கைகளையும் அறவே வெறுத்து வந்திருப்பது நாடறிந்த விஷயம். அதல்ை வைஸி ராய் போர் என்று கூறுமுன் காங்கிரஸைக் கலந்திருந்தால் எதேச்சாதிகாரம் என்ற பழிச்சொல்லும்