பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

இந்து முஸ்லிம் பிரச்னை

பிரிட்டிஷ் சர்க்கார் ஒன்று சேர்ந்து வாருங்கள் என்று இடைவிடாமல் கூறிவருகிறார்களே, அந்த ஒற்று மையின் அவசியத்தை காந்தியடிகளும் காங்கிரஸ்-சம் அறியாமல் இல்லை. ஆனல் பிரிட்டிஷ் சர்க்கார் நடை பெறும்வரை பூரணமான ஒற்றுமை உண்டாகாது என் பது அவர்களுடைய திடமான நம்பிக்கை. ஆயினும் அதுவரை சும்மாயிருக்கக் கூடாது என்று எண்ணியே திண்டாமை விலக்கையும் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை யும் காங்கிரஸ் கிர்மாணத் திட்டத்தில் பிரதான அம்சங்க ளாகச் சேர்த்திருக்கிறார்கள்.

ஹிந்து முஸ்லிம் வேற்றுமை என்னும் முட்டுக் கட் டையை பிரிட்டிஷ் தச்சனே செய்தான் என்பதையும், அது தேய்ந்து போகாமல் அவன் அடிக்கடி இரும்புப் பூண் பிடித்துவருகிருன் என்பதையும், அவ்விஷயத்தில் சில இந்தியர்கள் விஷயம் அறியாமல் அவனுக்கு உதவி செய்து வருகிறார்கள் என்பதையும் காந்தியடிகள் அறி வார். ஆயினும் அதை உடைத்து எறிந்தால்தான் காட் டிற்கு நலம் என்று எண்ணி அவ்வேலையில் அவர் சென்ற இருபது வருஷங்கட்கு அதிகமாக உழைத்து வருவதும், அதற்காக ஒரு சமயம் மூன்றுவாரங்கள் உண்ணுவிரதம் இருந்ததும் உலகமறிந்த விஷயமாகும். முஸ்லிம்களே