பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

ராஜாஜி திட்டம்

ராஜாஜி முஸ்லிம் லீக் தீர்மானத்தில் விளங்காத விஷயங்களேத் தெளிவுபடுத்தி கீழ்க்கண்ட விதமாக அந்தத் தீர்மானத்துக்கு உருக்கொடுத்தார்:

(1) முஸ்லிம் லீக், பரிபூரண சுதந்தரக் கோரிக்கையை ஆதரித்து, இடைக்கால சர்க்கார் அமைப்பதில் காங்கிர ஸ்-டன் ஒத்துழைக்க வேண்டும்.

(2) யுத்தம் முடிந்தபின் வடமேற்கிலும் வட கிழக்கி லும் முஸ்லிம் பெருவாரியாக மெஜாரிட்டியா யிருக்கும் பிரதேசங்கள் அடுத்தடுத்திருப்பதை ஒன்றாய்ச் சேர்த்து எல்லே நிர்ணயம் செய்ய ஒரு கமிஷன் நியமிக்க வேண்டும்.

(3) அதன் பின் முஸ்லிம் லீக் பிரிவினைக் கொள்கை யையும் காங்கிரஸ் ஒருமைக் கொள்கையையும் பிரசாரம் செய்ய உரிமை இருக்கவேண்டும்.

(4) அதன்பின் அந்தப் பிரதேசங்களில் 18 வயது ஆனவர்கள் எல்லோர்க்கும் ஒட்டுரிமை கொடுத்து சர்வ ஜன ஒட்டு எடுக்கவேண்டும்.

(5) பிரிந்து போவது என்று ஏற்பட்டுவிட்டால் இரண்டு ராஜ்யங்களும் தேசப்பாதுகாப்பு போன்ற பொது விஷயங்களைக் குறித்து உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்.

இந்தவிதமாக உருக்கொடுத்தபின் ராஜாஜி 1944-ம் வருஷம் மார்ச் மாதம் காந்தியடிகள் உண்ணுவிரதமிருந்த சமயம் அவரைப் பார்க்கப் போயிருந்தபொழுது, தம் முடைய யோசனையை மகாத்மாவிடம் கூறினர்.