பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பொழுது புலர்ந்தது

மகாத்மா அதைக் கேட்டதும்-அது சரிதான். முஸ் லிம்கள் அதிகமாகவுள்ள பிரதேசங்களையே பிரிக்கிருேம், அதுவும் அங்குள்ள சகல ஜனங்களிடமும் கேட்டே பிரிக்கிருேம், அப்படிப் பிரித்த பிறகு இரண்டு ராஜ்யங் களும் பொதுவான விஷயங்களைப் பொதுவாகவே கவ -ணிக்க உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறுகிருேம், அதனல் தேசத்தின் ஒருமையும் குலேயவில்லை, சுயநிர்ணய உரிமையும் மறுக்கப்படவில்லைஎன்று கண்டு உடனே ராஜாஜி திட்டத்துக்கு ஆசிகூறிய தோடு அதை ஜின்ன சாகிபுக்கு அறிவிக்குமாறு அதிகார மும் அளித்தார்.

ஆல்ை காந்தியடிகள் சிறையிலிருக்கும் பொழுது அதை ஜின்ன சாகிபுக்கு அனுப்புவதும், வெளியிடு வதும் பலன்தராது என்று ராஜாஜி எண்ணி காந்தியடிகள் வெளிவரும்வரை பொறுத்திருந்தார். மகாத்மா விடுதலை அடைந்ததும் ஜின்ன சாகிபுக்கு அனுப்பி அதை முதலில் அவர் அங்கீகரித்துக்கொண்டு அதன் பின் லீகை அங்கி கரிக்கும்படி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு ஜின்ன சாகிப் கான் ஏற்கவும்மாட்டேன், தள்ளிவிடவும் மாட்டேன், லீக் கவுன்ஸில் முன் சமர்ப்பிக்க மட்டுமே செய்வேன் என்று பதில் எழுதினர்.

ஜின்ன சாகிப் ஏற்காவிட்டால் லீக் கவுன்ஸில் ஏற்காது, அதல்ை லீக் கவுன்ஸில் முன் சமர்ப்பிக்குமுன் திட்டத்தை வெளியிட்டு அதற்குப் பொதுஜன ஆத ரவைப் பெருக்கவேண்டும், அப்படிச் செய்தால் தான் ஜின்ன சாகிபும் அங்கீகரிப்பார், லீகும் அங்கீகரிக் கும் என்று எண்ணி ராஜாஜி தமது திட்டத்தையும், காந்தியடிகளின் ஆசியையும், ஜின்ன சாகிபின் விடையை .யும் வெளியிட்டார். *