பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பொழுது புலர்ந்தது

தான், ஆல்ை அவர்தான் ஆலோசனை கூறி காங்கிரஸை கடத்துபவர் என்பதை உலகம் முழுவதும் அறியும்.

லண்டன் “ நியூ ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிகை வேவல் பிரபுவுக்கு யோசனை கூறும் சந்தர்ப்பத்தில் இந்தியாவுக் காக காந்திஜியைத் தவிர வேறு யாரும் பேச முடியாது. நேரு, ராஜாஜி யாருமே அவருடைய சம்மதமில்லாமல் எதையும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் ‘ என்று கூறியதுதான் உண்மையான விஷயம்.

ஆகஸ்ட் தீர்மானத்திற்குப் பின் அநேக காரியங்கள் நடைபெற்றனவே, அவற்றில் சம்மந்தப்பட்டதாக அநே கரைக் கைதி செய்ய எண்ணியும் அவர்கள் தலைமறைவா யிருந்து வந்தபடியால் சர்க்காரால் அவர்களைக் கைதி செய்ய முடியவில்லை. அதைக் கண்ட காந்தியடிகள் தாம் விடுதலே அடைந்து வெளியே வந்தபின், அது தவறு, உடனே சர்க்காரிடம் ஆஜராய் விடவேண்டும் என்று கூறினர். அப்படி ஆஜரால்ை அரசாங்கத்தின் கோபம் அதிகப்பட்டு அநேக துன்பங்கள் நேரலாம். ஆயினும் காந்தியடிகளின் ஆணையைச் சிரமேற்கொண்டு தலைமறை வாய் இருந்தவர்கள் சர்க்காரிடம் தங்களை ஒப்புவித்துக் கொண்டார்கள். இந்தப் பெரிய சோதனை ஒன்றே காந்தியடிகளுக்குள்ள இணையற்ற செல்வாக்கை நிரூ பித்து விடக்கூடியதாகும். இதற்கு அதிகம் தேவை யானுல் அவ்வருஷம் காந்தியடிகளின் பிறந்ததினம் நாடெங்கும் கொண்டாடப் பெற்ற விமரிசையும், அன்னை கஸ்துாரிபாய் நிதிக்கு சகல ககதியாரும் தாராள மாகக் கொடுத்த அன்பும் தக்க சான்றுகளாகும்.

காந்தியடிகளும் எனக்குக் காங்கிரஸிடம் எவ்வளவு செல்வாக்கு உண்டோ அவ்வளவு செல்வாக்கையும் உப யோகித்து காங்கிரசை நம்முடைய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி செய்வேன் என்று ஜின்ன சாஹிபிடம்