பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பொழுது புலர்ந்தது.

அப்படியிருக்க அவர்கள் வேறு சமுதாயத்தார் ஆகி விட்டார்கள் என்று கூறுவது எப்படி? அப்படியால்ை இந்துக்கள் எல்லோரும் முஸ்லிம்களாகிவிட்டால் இப் பொழுதுள்ள இரண்டு சமுதாயங்களும் ஒரு சமுதாயம் ஆகிவிடுமா? நாம் முன்னலும் ஒரு சமுதாயம்தான், இப்பொழுதும் ஒரு சமுதாயம் தான். நாம் எல்லோரும் அடிமைகள், கம்முடைய கூட்டு முயற்சியால் அடிமைத் தளேயிலிருந்து விடுவித்துக் கொண்டோமானல் அந்தக் காரணத்தாலும் நாம் ஒரு புதிய தனி சமுதாயமாக ஆகி விடுவோம்.-இது மகாத்மா காந்தியடிகளின் அசைக்க முடியாத இரண்டாவது ஆட்சேபம்.

ஆல்ை சென்னை முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் ஹமீத் கான் சாஹிப் “ ஒருவன் மதம் மாறியவுடன் அவ ஆணுடைய கலாசாரம் எல்லாம் மாறிவிடுவதால் அவன் புதிய சமுதாயத்தைச் சேர்ந்தவன் ஆகிவிடுகிருன் ‘ என்று வாதித்தார். அதற்கு பெர்ஹாம்பூர் மாஜி எம். எல். வி. அப்துல் ஆமத் சாஹிப் “ அப்படியானல் வங்காள முஸ்லிம்களுடைய கலாசாரமும் பழக்க வழக்கங்களும் மற்ற முஸ்லிம்களுடைய கலாச்சாரங்களிலிருந்தும் பழக்க வழக்கங்களிலிருந்தும் வேறுபட்டுக் காண்பதேன் ? வங்காள முஸ்லிம்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகள் வங்காள முஸ்லிம் களுக்கும் வங்காள இந்துக்களுக்கும் இடையில் காணப் படாதது ஏன்?” என்று கேட்பதே சரியான சமாதானம்.

T

“ நேஷன்’

இந்தச் சந்தர்ப்பத்தில் தேசிய சமுதாயம் என்பதற்கு ஜின்ன சாகிப் உபயோகிக்கும் ஆங்கிலப் பதமாகிய “ நேஷன்” என்பதற்கு ஆங்கில அறிஞர்கள் எல்லோரா அலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள “ ஆக்ஸ்போர்ட் அகராதி “

பொருள்