பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திஜியின் திட்டம் 165

யில் காணப்படும் பொருளைக் கவனிப்பது பொருத்தமா யிருக்கும். அகராதி கூறும் பொருள் “ பரம்பரையாலும் பாஷையாலும், சரித்திரத்தாலும், அரசியல் வாழ்வாலும் தனியாகப் பிரிந்து கிற்கும் சமூகம்’ என்பதாகும். இதில் மதத்தைப்பற்றிய பிரஸ்தாபமே இல்லை என்பதை முதலில் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களில் 95 சதமான வர்கள் இந்துக்களாயிருந்து மதம் மாறியவர்கள். ஒவ் வொரு பிரதேசத்திலும் இந்துக்களின் தாய் மொழியே முஸ்லிம்களுக்கும் தாய் மொழியாகும். ஆயிர வருஷகால மாக இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்தே இந்திய நாகரீகத்தை வளர்த்து வந்திருக்கிறார்கள். நூறு வருஷ காலமாக பிரிட்டிஷ் சர்க்காரின் அடிமைகளாய் இருந்து வருகிறார்கள். ஆகவே “ நேஷன் “ என்பதன் பொருளைக் கொண்டு பார்த்தால் இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு சமுதாயத்தார் ஆகமாட்டார்கள் என்பது நன்கு விளங்கும்.

ஸர். ஸையது அகமத்கான் உபதேசம்

நம்முடைய தேசத்தில் தாதாபாய் கவரோஜி எவ்வளவு கீர்த்தி பெற்றிருந்தாரோ அவ்வளவு கீர்த்தி பெற்றிருந்தவரும் அலிகார் முஸ்லிம் சர்வகலாசாலேயை ஸ்தாபித்தவரும் முஸ்லிம் சமூக புனருத்தாரணத்தின் முக்கிய புருஷருமான ஸர் ஸையத் அகமத்கான் 60 வருஷங்களுக்கு முன்னலேயே,

ஒரு தேசத்தில் தனித்தனி விசேஷத்தன்மை களுடைய பல வகுப்பார்களிருந்தாலும் அவர்கள் ஒரே தேசத்தில் வசிப்பதால் அவர்கள் எல்லோரையும் ஒரே சமுதாயத்தாராகவே மதிக்க வேண்டும் என்பது இன்று ாேற்று உண்டான சம்பிரதாயமன்று, பழங்காலத்தி லேயே உண்டானதாகும். இந்து முஸ்லிம் சகோதரர்