பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பொழுது புலர்ந்தது

களே! நீங்கள் இருவரும் இந்துஸ்தானத்தில் தானே வசிக்கிறீர்கள் ? இந்துஸ்தானத்தில் தானே மாளப் போகிறீர்கள் ? அப்படி யிருக்க இரண்டு சமுதாயத்தா ராவது எப்படி? இந்து என்பதும் முஸ்லிம் என்பதும் மதத்தை மட்டுமே குறிக்கும் சொற்கள் ஆகும். அதனல் இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே ஆவார்கள் “ என்று உபதேசித்ததை முஸ்லிம் சகோதரர்களுக்கு ஞாபகப் படுத்த விரும்புகிருேம்.

ஒரு குடும்பம் - இரு சகோதரர்கள்

(3) மகாத்மா காந்தியடிகள், இந்துக்களையும் முஸ்லிம் களையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர் கள் எனக் கூறுவதே பொருந்தும் என்று கூறுகிரு.ர்.

இந்த உண்மையை உட்கொண்டே ஸர். ஸையத் அகமத் கான் அவர்களும் ஒரு உடம்புக்கு இரண்டு கண்கள் எப்படி அவசியமோ, அவை இரண்டையும் எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படியேதான் இந்தியா தேசத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைபிரிக்க முடி யாதவர்கள் என்று கூறினர். இவர் கூறிய இந்த உவமை உலகப் பிரசித்தமானதாகும்.

11. சர்வஜன ஒட் -

முஸ்லிம் லீக் அதிகமான பிரதிநிதித்துவம் உடையது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனல் அதுதான் முஸ்லிம்கள் அனைவர்க்கும் ஏகப் பிரதிநிதி என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. வீக்கின் கருத்தை ஒப்புக் கொள்ளாத முஸ்லிம்கள் ஏராளமானவர் உளர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதல்ை பிரியவேண்டுமா என்று அவர்களிடம் கேட்காமல் இருக்கலாமா? அதுவும்