பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திஜியின் திட்டம் 167

தவிர பிரிக்கப்போகும் பிரதேசத்திலுள்ள முஸ்லிமல்லா தாருடைய சம்மதத்தையும் கேட்க வேண்டாமா, அது தானே சுயநிர்ணய உரிமை, அதுதானே ஜனநாயகம்? ஆதலால் சர்வஜன ஒட்டு எடுக்கவேண்டியது அத்யாவசிய மாகும் - இதுதான் சர்வஜன ஒட்டு விஷயமாக மகாத்மா காந்தியடிகள் ஜின்னசாகிபிட்ம் கூறிய சமாதானமாகும்.

III. முஸ்லிம் பிரதேசங்கள் :

(1) முஸ்லிம்கள் சிந்து மாகாணத்தில் 71 ஸ்தமானம், பலுச்சிஸ்தானத்தில் 81 ஸதமானம், எல்லைப்புறத்தில் 92 ஸதமானம். அத்துடன் அந்த மாகாணங்களில் ஒவ்வொரு ஜில்லாவிலும் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். அதனல் அவைகளே அப்படியே பிரித்துவிடலாம்.

(2) ஆல்ை முஸ்லிம்கள் பஞ்சாபில் 57 ஸ்தமானமும் வங்காளத்தில் 54 ஸதமானமுமே இருக்கிறார்கள். அதோடு பஞ்சாபில் ஸ்ட்லெஜ் நதிக்கு மேற்கேயுள்ள 17 ஜில்லாக் களில் மட்டுமே மெஜாரிட்டியாய் இருக்கிறார்கள். கிழக்கேயுள்ள 12 ஜில்லாக்களிலும் முஸ்லிமல்லாதாரே மெஜாரிட்டி.

அதுபோல வங்காளத்தில் 12 ஜில்லாக்களில் முஸ்லி மல்லாதாரே மெஜாரிட்டியாய் இருக்கிறார்கள். அஸ்ஸா மிலோ ஒரே ஒரு ஜில்லாவில்தான் முஸ்லிம்கள் மெஜா ரிட்டி, அந்த மாகாண முழுவதிலும் முஸ்லிமல்லாதாரே. மெஜாரிட்டி.

ஆதலால் முஸ்லிம்கள் மெஜாரிட்டியாயுள்ள ஜில்லாக் களே மட்டுமே முஸ்லிம் ராஜ்யமாகப் பிரிக்கலாமேயன்றி முஸ்லிமல்லாதார் மெஜாரிட்டியாயுள்ள ஜில்லாக்களே யும் முஸ்லிம் ராஜ்ஜியத்தில் சேர்த்துவிடவேண்டும். என்று கேட்பது சிறிதும் நியாயம் அன்று என்று காந்தியடிகள் கூறினர்.