பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திஜியின் திட்டம் 169

IV. பொது விஷயங்கள் :

இரண்டு ராஜ்யங்களுக்கும் இடையில் பொதுவான விஷயங்கள் கிடையா என்றும், இரண்டும் பரிபூரண சுதந் திரமுடைய தனித்தனி ராஜ்யங்கள் என்றும் கூறில்ை அது அனுபவ சாத்தியமான விஷயமா? அப்படியால்ை அதை நேசப்பான்மையில் தீர்க்கமுடியுமா, சண்டை போட்டுத்தானே தீர்க்கவேண்டி இருக்கும். ஒரே குடும் பத்திலுள்ள இரண்டு சகோதரர்கள் பிரிந்துகொள்வதாக எண்ணில்ைதான் எளிதில் சமரசம் உண்டாகும். இரண்டு சகோதரர்கள் பங்கிட்டுக் கொண்டால் அதல்ை அவர்கள் இருவரும் விரோதிகள் ஆய்விடமாட்டார்கள். உலகத் தார் முன்னிலையில் ஒன்று சேர்ந்து சகோதரர்களாகவே கிற்பார்கள். அப்படி எண்ணி எங்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் முஸ்லிம்களுக்கும் நன்மையுண்டு, ஹிந்துக்களும் பிரிவினைக்கு ஒத்துக்கொள்வார்கள் என்று காந்தியடிகள் கூறினர்.

சர்க்கார் இணங்குமா ?

அதுவும் தவிர காங்கிரஸ்-சம் லீகும் தனித்தனி அன்னிய ராஜ்யங்களாகப் பிரிந்துகொள்ளச் சம்மதித் தாலும் பிரிட்டிஷ் சர்க்கார் அதற்கு இணங்குவார்களா ? வைசிராய் வேவல் துரை இந்தியாவின் ஒருமையைக் குறித்து அடிக்கடி பேசி வந்தார். அதுபோலவே முன்னல் வைசிராயாய் இருந்த லின்லித்கோ பிரபுவும் அதையே வற்புறுத்தி வந்தார். இங்கிலாந்து சென்ற பிறகு கூட இந்தியாவுக்குப் பாதுகாப்பு வேண்டுமானல் அதைக் கவ னித்துக் கொள்வதற்கு ஒரு பொதுவான மத்திய கிர்வாக சர்க்கார் இல்லாமல் முடியாது என்று தெளிவாகக் கூறினர்.