பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பொழுது புலர்ந்தது

சர்க்கார் அமைத்தால்தான் நமக்கு இந்தியாவின் ஒத்து ழைப்பு கிடைக்கும், அது கிடையாதவரை நாம் ஜப்பான வெல்ல முடியாது என்று ரூஸ்வெல்டுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

சைவிைன் முடிசூடா மன்னராயுள்ள ஷியாங்கே ஷேக்கும் இந்தியாவைத் திருப்தி செய்யும்படி பிரிட்டிஷ் சர்க்காருக்கு யோசனே கூறுமாறு அமெரிக்க ஜனதி பதியைக் கேட்டுக்கொண் டிருப்பதாகச் செய்திகள் வந்தன. துர்க்குறிகள்

இதெல்லாம் கேட்டதும் இப்பொழுதே சுதந்திரக் கனி நம்முடைய மடியில் தொப் என்று விழுந்துவிடும் போல் தோன்றிற்று. ஆனல் உண்மையில் அப்படி எதுவும் கடந்து விடவில்லை. அமெரிக்க அறிஞர்களும் கூறினர்கள், ரூஸ்வெல்ட்டின் பிரதிநிதியும் கூறிஞர், ஆனல் ரூஸ்வெல்ட் மகா பிரபு வாய் திறந்து ஏதேனும் கூறினரா? அவர் ஜனநாயகம், சுதந்திரம், சமாதானம் என்று பெரிய பெரிய விஷயங்களைப் பொதுப்படையாகப் பேசினரே தவிர ஒரு வார்த்தையாவது இந்தியாவின் பெயரைச் சொல்லி உச்சரிக்கவில்லை.

பிரிட்டிஷ் அறிஞர்கள் கூறினர்களே, அவர்களுக்கு அரசாங்கத்திடம் செல்வாக்குக் கிடையாது. அதுதான் வேண்டாம், அரசாங்கத்திடம் அழுத்தமாக வற்புறுத்திக் கூறக் கூடிய மனேதைரியமாவ துண்டா? அதுவும் கிடையாது என்று ஆங்கில ஆசிரியர் எட்வர்ட் தாம்ஸன் ராஜாஜி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறினர். பிரிட்டிஷ் சர்க்காரோ நியாயத்துக்கும் நேர்மைக்கும் செவி சாய்க்காமலும் அறிஞர்கள் எச்சரிப்பதைக் கவனி யாமலும் ஏகாதிபத்தியப் பிடிப்பை அதிகமாக இறுக்கவே வேலை செய்துகொண்டு வந்தார்கள்.