பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்குறிகள் 175

வேவல் பிரபுவிடம் தேசிய சர்க்கார் ஏற்படுத்தினல் தான் காட்டில் காணப்படும் பஞ்சமும் நோயும் போகும் என்று கூறினல், அவர் அது யுத்தகாலத்தில் சாத்திய மில்லே, அதை விட்டு ஜனங்களுடைய வருவாயை விருத்தி செய்ய அரசாங்கத்தோடு ஒத்துழைக்க வாருங்கள் என்று கூறி ஜனங்களுடைய மனத்தை சுதந்திர விஷயத்தை விட்டு வேறு விஷயங்களில் திருப்பிவிட முயன்றார், ஆல்ை அரசியல் சுதந்திரத்தை ஏற்படுத்தாமல் பொரு ளாதார முன்னேற்றத்தைக் காண முயலுவது வண்டிக்கு முன் குதிரையைப் பூட்டாமல் குதிரைக்கு முன் வண்டி யைப் பூட்டுவதாக இருக்கிறதென்று காந்தியடிகள் கண்டித்தார். தேசத்தின் வருவாயைப் பெருக்குவதற்காக பம்பாய் திட்டத்தை வகுத்தவர்களும் அப்படியே கூறினர்கள்.

வேவல் துரை பொருளாதாரத் துறையில் வேலை செய்ய வேண்டுமென்று கூறினரே, அந்தத் துறையில் நடைபெற்று வந்தது யாது ?

இங்கிலாந்துக்கு நாம் கடன் கொடுக்கவேண்டி இருந்தது. அந்தக் கடனே நாம் இங்கிலாந்திடம் கைநீட்டி வாங்கியதில்லை. இங்கிலீஷ் சர்க்கார்தான் தங்கள் நலனுக்காக பர்மா, ஆப்கானிஸ்தானம், அபிளினியா, மலேயா முதலிய இடங்களில் நடத்திய யுத்தங்களின் செலவை எல்லாம் நம் தலையில் கடகை ஏற்றிவைத்து விட்டார்கள். அதல்ை நாம் அதைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியபொழுது, கொண்ட கடனைத் தீர்க்க வேண்டாமா என்று கோபிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது யுத்தத்திற்காக சாமான்கள் அனுப்பி அந்தக் கடனே தீர்த்து விட்டோம். அதுபோக ஆயிரம் கோடி பவுன் அவர்களுக்குக் கடகை தந்துமிருக்கிருேம். அந்தப் பணத்தைக் கொண்டு யுத்தத்திற்கு பின் கைத்