பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்குறிகள் 177

டாலும் இங்கும் நேசநாடுகளிலும் நடைபெற்ற காரியங்கள் நல்ல மாதிரியாகத் தோன்றவில்லை.

இங்கிலாந்தில் ஸர். எப். கே. நூன்போன்ற பெரிய இந்திய உத்தியோகஸ்தர்கள் இந்தியாவில் எல்லாம் சரியாக நடந்து வருவதுபோல பிரசாரம் செய்து வந்தார்கள். அமெரிக்காவில் அரசாங்க சார்பில் பிரசாரம் செய்வதற்காக சில இந்தியர்களே அனுப்பி அவர்களே இந்தியாவில் அதிக செல்வாக்குள்ளவர்கள்போல் காட்டி வந்தார்கள். அவர்களைத் தவிர சுமார் முன்னுாறு வெள்ளேக்காரர்களையும் நியமித்து பிரசாரம் நடத்தி வருவதாகவும் செய்திகள் வந்தன.

இந்தியாவில் சர்க்கார் இந்தியக் கைத்தொழில் பெடரேஷனுக்கு ஏராளமான பணம் கொடுத்தார்கள் அதைச் சேர்ந்த ராயிஸ்டுகள் காங்கிரஸை எதிர்த்துப் பிரசாரம் செய்து வந்தார்கள். “ ஹிந்துஸ்தான் டைம்ஸ் ” பத்திரிகையின் விசேஷ கிருபர் இந்தியாவின் முக்கிய மான நகரங்களிலெல்லாம் சர்க்கார் பணவுதவியால் கடை பெறும் பத்திரிகைகளும் நேசநாட்டுத் தலைநகரங்களி லெல்லாம் சர்க்கார் அமைத்துள்ள செய்தி ஸ்தாபனங் களும் தேசிய சுதந்திர இயக்கத்திற்கு விரோதமாக வேலை செய்யப் போவதாக அறிவித்தார்.

லின் லித்கோ பிரபு பிரிட்டிஷ் டோரிக் கட்சியார் வரப்போகும் தேர்தல்களில் இந்தியப் பிரச்னே விஷய மாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று யோசனை சொல்வதற்காக அந்தக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கப்போவதாகவும் செய்தி வந்தது.

இன்னும் ஒர் சூழ்ச்சி நடப்பதாக லண்டன் யு. பி. |கிருபர் கூறினர். போர்முனையிலுள்ள இந்திய வீரர்களே ஒரு தனி வகுப்பாராகச் சிருஷ்டித்து இந்திய சுதந்திரக்

563—12