பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பொழுது புலர்ந்தது

கோரிக்கைக்கு விரோதமாக கிற்குமாறு செய்வதே அந்தச் சூழ்ச்சியாம்.

சென்ற மகா யுத்தத்தில் ஜெர்மன் சேனை வெள்ளம் பாரிஸையும் லண்டனேயும் மூழ்கடித்துவிடாமல் இடை மறித்து கின்று காத்துக் கொடுத்தவர்கள் நமது வீரர்கள் தான் என்பதும் அதற்காக அவர்களே கர்ஸன் பிரபு வானளாவப் புகழ்ந்தார் என்பதும் உலகப் பிரசித்தம். ஆல்ை அவ்வீரர்கள் செய்த உதவிக்காக அவர்களுடைய தாய்காடு பெற்ற பரிசுகள் ரவ்லட் சட்டமும் பஞ்சாப் அதிேயுமேயாகும். இந்த யுத்தத்தில் 20 லட்சம் இந்திய வீரர்கள் ஆப்பிரிக்காவிலும் இத்தாலியிலும் அஸ்ஸா மிலும் காஸிஸத்தை எதிர்த்து விரட்டிவந்தார்கள். அப்படி அவர்கள் பிற நாடுகளின் சுதந்திரத்தைக் காப்பாற்றத் தங்கள் ரத்தத்தை ஆருய்ப் பெருக்கி வந்தார்களே, அவர்களுடைய தாய்காட்டிற்கு கியாயத்தை ஒட்டி இல்லாவிட்டாலும் நன்றியை ஒட்டியாவது சுதந் திரம் வழங்கவேண்டாமா? அதற்குப் பதிலாக அவர்களை அப்படி வீரர்கள் இப்படிச் சூரர்கள் என்று புகழ்வதும் அவர்கள் திரும்பி வந்தபின் அவர்களுக்குக் கொஞ்ச கிலமும் அவர்களுடைய குழந்தைகட்கு இலவசக் கல்வி யும் அவர்களுடைய பெண்களுக்கு இலவச மருந்தும் கொடுக்க ஏற்பாடு செய்வதும் போதுமோ?

ஆல்ை அரசாங்கத்தார் செய்யும் ஏற்பாடுகள் எல்லாம் அவ்வளவாகத்தான் இருந்தன. அந்த ஏற்பாடு களைச் செய்துவிட்டால் அந்த வீரர்கள் அவற்றில் மயங்கி அரசாங்கத்தின் அடிமைகளாக ஆகி தாய்நாட்டின் சுதந் திரத்திற்காக சத்தியாக்கிரகப் போர் செய்யும் தங்கள் சகோதரர்களுக்கு விரோதமாக கின்றுவிடுவார்கள் என்று சர்க்கார் மனப்பால் குடித்தார்கள்.