பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்குறிகள் I79

--

நமது வீரர்கள் சேனேயின் விதிகளுக்கு அணுவளவும் பிறழாமல் நடப்பார்கள், நன்றி விசுவாசமாய் இருப் பார்கள். ஆயினும் அதே சமயத்தில் சுதந்திர தாக முடையவர்கள், நன்றி விசுவாசம் என்று எண்ணி காட்டின் சுதந்திரத்திற்கு விரோதமாக நிற்கமாட் டார்கள். அவர்கள் சாப்பாட்டை எண்ணியே சேனையில் சேர்ந்தபோதிலும் சண்டையில் ஈடுபட்டதும் நாசிசத்தின் கொடுமையை அறிந்துகொண்டு அதை ஒழிக்கத் தீவிர மாகப் போராடினர்கள். வீட்டை விட்டுப் புறப்படும் பொழுது அவர்களிடம் மண்ணில் புதைந்த விதைபோல மறைந்து கிடந்த சுதந்திர வேட்கை அங்கே போர் முனைகளில் சுதந்திரப் பிரியர்களான ஆங்கில அமெரிக்க வீரர்களுடன் பழக நேரிட்டதும் முளைத்து வளர்ந்ததே யன்றி அழிந்து போகவில்லை என்பதில் சந்தேகமில்லை. ஆதலால் அவர்களைச் சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டையாக உபயோகித்து கொள்ளலாம் என்று அமெரி கூட்டத்தார் எண்ணியதெல்லாம் பின்னல் வெறும் பகற்கனவாகவே

முடிந்தது.