பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

சம்பாஷணைக்குப் பின்

இந்த விதமாக நாட்டின் அரசியல் நிலைமையில் ஏற்பட்டிருந்த சிக்கலைத் தீர்த்து ஜனங்களுக்கு நன்மை தேடும் பொருட்டு மஹாத்மா காந்தியடிகள் வைசிராய்க்கு எழுதிய யோசனையும் ஜின்ன சாகிபுடன் நடத்திய சம்பாஷணையும் பயன்படாமல் போகவே நாடெங்கும் அதிருப்தி அதிகமாக ஏற்பட்டிருந்தது. - அதல்ை மத்திய சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்த புலாபாய் தேசாய் ஹிந்து முஸ்லிம் சமர ஸ்ம் காண விரும்பி மத்திய சட்டசபையில் முஸ்லிம் லீகின் தலைவராயிருந்த நவாப்ஜாதா லியாகத் அலிகானுடன் சம்பாஷணைகள் கடத்தி இறுதியில் தேசாய்-லியாகத் ஒப்பந்தத்தை உருவாக்கினர். அதன் முக்கிய ஷரத்துக் கள் பின்வருமாறு :- -

1. இப்பொழுதுள்ள அரசியல் சட்டத்தின் கீழ், அடியிற் கண்ட விதமாக இடைக்கால சர்க்கார் அமைக்க காங்கிரஸும், லீகும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

(அ) நிர்வாக சபையில் காங்கிரஸ்-சம், லீகும் சம மான ஸ்தானங்கள் பெறவேண்டும்.

(ஆ) ஹரிஜனங்களுக்கும் சிக்கியர்களுக்கும் ஸ்தா னங்கள் அளிக்கப்படவேண்டும். --

(இ) சேனதிபதியும், கிர்வாக சபையில் ஒரு அங்கத் தினரா யிருப்பார்.

2. மத்திய சட்டசபையிலுள்ள தேர்ந்தெடுக்கப் பட்ட அங்கத்தினர்களில் பெரும்பாலோர் ஆதரிக்கும்