பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பாவுஃணக்குப் பின் 181

சட்டத்தையே நிர்வாக சபையார் அமூல் நடத்துவார்கள் 3 இடைக்கால சர்க்கார் அமைந்ததும் காங்கிரஸ் காரியக்கமிட்டி அங்கத்தினர்களையும் இதர காங்கிரஸ் காரர்களையும் விடுதலை செய்யவேண்டும்.

4. இடைக்கால சர்க்கார் அமைந்தபின் மாகாணங் களில் காங்கிரஸ் லீக் கூட்டு மந்திரி சபைகள் அமைக்கப் படவேண்டும்.

இந்தத் திட்டத்தை புலாபாய் தேசாயும் லியாகத் கானும், வைசிராயிடம் சமர்ப்பித்தார்கள். வைசிராய் அதை ஆதாரமாகக்கொண்டு அரசியல் சிக்கலே அவிழ்த்து விட எண்ணினர். அதனல் 1945 மார்ச்சு மாதத்தில் வைசிராய் வேவல்பிரபு இது விஷயமாக பிரிட்டிஷ் மந்திரி சபையாருடன் கலந்து பேசுவதற்காக இங்கிலாங் திற்குச் சென்றார்.

அதன்பின் ஜூன் மாதம் 5ம் தேதி இந்தியாவுக்குத் திரும்பிவந்து 14ம் தேதி தம்முடைய திட்டத்தை ரேடியோ மூலம் இந்திய மகா ஜனங்களுக்குத் தெரிவித் தார். அதன் சுருக்கம் வருமாறு :

1. பிரிட்டிஷ் சர்க்கார் வைசிராயின் நிர்வாக சபையை ஜனப்பிரதிநிதித்துவம் அதிகமாக உள்ள முறையில் அமைக்க விரும்புகிறார்கள். வைசிராய் அரசி யல் தலைவர்களுடன் கலந்து பேசி அங்கத்தினர்களைத் தெரிந்தெடுப்பார். கிர்வாக சபையில் ஜாதி ஹிந்துக் களுக்கும் முஸ்லிம்களுக்கும் சரி சமானமாக ஸ்தானங்கள் அளிக்கப்படும். அயல்நாட்டு விஷயத்தை இந்திய அங்கத் தினரே கிர்வகிப்பார். வைசிராயும் சேனதிபதியும் தவிர இதர அங்கத்தினர்களெல்லோரும் இந்தியர்களாகவே இருப்பார்கள்.

2. இந்த கிர்வாக சபை தற்பொழுதுள்ள அரசியல் சட்டத்தின்படியே வேலை செய்யும். வைசிராய் தம்