பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பாஷணைக்குப் பின் 183

காரம் இருக்கும்பொழுது இடைக்கால சர்க்கார் அமைப்ப தால் என்ன பயன் உண்டாகும் என்று தேசபக்தர்கள் எண்ணினர்கள்.

அதற்கு இந்தியா மந்திரியாயிருந்த அமரி கீழ்க் கண்டவாறு சமாதானம் சொன்னர் :

வைசிராய்க்கு இந்த விசேஷ அதிகாரம் இருப்பது உண்மைதான். ஆனல் அந்த அதிகாரம் இந்திய மக் களுக்கு விரோதமாக உபயோகப்படுத்துவதற்காக ஏற் பட்டதன்று. இதுவரை அவ்விதம் உபயோகிக்கவு மில்லே. அது சிறுபான்மை இனத்தோரையும் சமஸ்தானங் களையும் பாதுகாப்பதற்காகவே ஏற்பட்டதாகும். ஆதலால் நிர்வாக சபையார் காட்டை அபிவிருத்தி செய்யும் விஷயத் தில் அவர்களுக்கு வைசிராயின் விசேஷ அதிகாரத்தால் எவ்விதத் தடையும் ஏற்படாது.

ஜூன் மாதம் 15ம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி அங்கத்தினர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்கள் 34 மாதம் 6 நாள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்தார்கள். அவர்களே தேச மஹாஜனங்கள் அளவற்ற சந்தோஷத்தோடு வரவேற்றார்கள்.

1942க்குப் பிறகு அவர்கள் முதன் முதலாக பம்பாயி அலுள்ள பிர்லா மாளிகையில் ஜூன் மாதம் 21ம் தேதி கூட்டம் கூடினர்கள். மெளலான ஆஸாத் தலைமை வகித்தார். காட்டின் கிலேமையைப் பற்றியும், வைசி ராயின் திட்டத்தைப் பற்றியும் 2 நாட்கள் ஆராய்ந்தார் கள். இறுதியில் வைசிராயின் அழைப்புக் கிணங்கி சிம்லாவுக்குச் செல்வதாக முடிவு செய்தார்கள்.

ஆனல் வைசிராய் மெளலான ஆஸாதை அழைக் காதது பெருந் தடையாக இருந்தது. அதைக் காந்தியடிகள் வைசிராய்க்கு எடுத்துக் காட்டினர். வைசிராய் உடனே ஆஸாதுக்கும் அழைப்பு அனுப்பி வைத்தார்.