பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பொழுது புலர்ந்தது

ஹரிஜனங்களும் சீக்கியர்களும் சேர்ந்து கொள்வார்கள். அதல்ை கிர்வாக சபையில் காங்கிரசே மெஜாரட்டியா யிருக்கும். வைசிராயின் விசேஷ அதிகாரம் முஸ்லிம்களை பாதுகாக்கக் கூடுமாயினும் வைசிராய் அதை அடிக்கடி உபயோகிப்பாரென்று எதிர்பார்க்க முடியாது.

2. காங்கிரஸ் சபை முஸ்லிம்களே கியமிக்கத் தனக்கு உரிமை இருப்பதாகக் கூறுகிறது. ஆனல் இந்தியாவி லுள்ள முஸ்லிம்களில் தொண்ணுாற்றாென்பது சதமான மானவர்கள் முஸ்லிம் லீகையே ஆதரிக்கிறார்கள். ஆத லால் முஸ்லிம்களின் பெயர்களே வைசிராய்க்குக் கொடுப் பதற்கு முஸ்லிம் லீகுக்குமட்டும்தான் உரிமை உண்டு.

காங்கிரஸ் வாதம்

ஜின்ன மேற்கண்டவிதமாக அறிக்கை வெளியிட்ட தும் பண்டித பந்த் அவருடைய வாதத்தை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் சாரம் வருமாறு :

1. காட்டில் ஹிந்துக்கள் முஸ்லிம்களை விட 3 பங்கு தொகையினர். ஆனல் அவர்களுக்கு கிர்வாக சபையி லுள்ள ஸ்தானங்களில் மூன்றில் ஒரு பங்கே கிடைக் கின்றன. இவ்விதம் பெரும்பான்மைக் கட்சியார் சிறு பான்மை ஆய்விடுகின்றனர். -

2 ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நலன்கள் ஒன்றே. அதல்ை இருகட்சியாரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய முடியும்.

3. முஸ்லிம்களல்லாதவர்கள் எல்லோரும் முஸ்லிம் களுக்கு விரோதமாக ஒன்று சேர்ந்து கொள்வார்கள் என்று சொல்வதற்கு ஆதாரம் கிடையாது.

4. முஸ்லிம்கள் பெரும்பான்மையோராக உள்ள மாகாணங்களில் லீக் மந்திரிசபை காணப்படவில்லை. எல்லைப்புற மாகாணத்தில் காங்கிரஸ் மந்திரிசபையும்