பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பொழுது புலர்ந்தது

தொழிற்கட்சி மந்திரி சபை

ஜெர்மனியுடன் நடந்துவந்த யுத்தம் முடிந்துவிட்ட தால் இங்கிலீஷ் பிரதம மந்திரி இங்கிலாந்தில் பார்லி மெண்ட் சபைக்குப் பொதுத் தேர்தல் கடத்த முடிவுசெய் தார். அப்படியே அது 1945 ஜூலை 5-ம் தேதி நடைபெற் றது. சர்ச்சில் தாமும் தம்முடைய கட்சியாருமே பெருமித மான வெற்றிபெறப் போவதாக மனப்பால் குடித்துக் கொண்டிருந்தார். ஆனல் தேர்தலின் முடிவைக்கண்டு அவர் திகைத்துப் போய்விட்டார். அவருடைய கட்சிக்கு 210 ஸ்தானங்களும் தொழிற்கட்சிக்கு 417 ஸ்தானங் களும் கிடைத்தன. அதல்ை தொழிற்கட்சி மந்திரிசபை ஏற்பட்டது. ஆட்லி பிரதம மந்திரியானர்.

1940 மே மாதம் 10ம் தேதி அதிகாரத்துக்கு வந்த சர்ச்சில் 1945 ஜூலை மாதம் 27ம் தேதி வெளியேறினர். 5 வருஷகாலமாக காங்கிரஸை நசுக்கத் தம்மால் இயன்ற மட்டும் முயற்சி செய்த சர்ச்சில் போனதும் தொழிற்கட்சி மந்திரிசபை ஏற்றதும் இந்தியாவுக்கு நல்ல சகுனங்க ளாகத் தோன்றின. அத்துடன் இந்திய அபிலாஷைகளில் அனுதாபமுடைய பெத்விக் லாரன்ஸ் இந்தியா மந்திரி யார்ை.

இதை அறிந்ததும் இந்திய தேசீயவாதிகள் இந்தி யாவுக்கு விமோசனகாலம் சமீபித்து விட்டதாக எண்ணி னர்கள்.