பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

இந்திய தேசிய ராணுவம்

அதன்பின் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கர்கள் ஜப் பான்மீது அணுகுண்டு வீசியதன் காரணமாக ஜப்பானிய யுத்தம் திடீரென்று முடிவுற்றது. அதன்பின் பர்மாவிலும் மலேயாவிலும் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த போர் வீரர்களே இந்தியாவில் கொண்டுவந்து சிறையி லடைத்து வைத்தார்கள். இந்த ராணுவத்தின் சரித்தி ரத்தை அறிந்துகொள்வது அவசியம்,

பிரிட்டன் ஜெர்மனியுடனும் இத்தாலியுடனும் போர்புரிந்து கொண்டிருந்த சமயத்தில் ஜப்பான் சைைைவ அடிமைப்படுத்த அரும்பாடு பட்டுக்கொண் டிருந்தது. சைனவுக்கு ஆயுத தளவாடங்கள் பர்மா வழி யாகச் செல்வதைத் தடுப்பதற்காக பர்மா பாதையை மூடி விட வேண்டும் என்று ஜப்பான் பிரிட்டிஷ் சர்க்காரிடம் கூறிற்று. அப்படியே செய்கிருேம் என்று கூறி அவர் கள் பர்மா பாதையை மூடிவிட்டார்கள். உலகத்தில் சுதந்திரத்தைக் காப்பதற்காகப் போரில் இறங்கியிருப்ப தாகக் கூறிய பிரிட்டன் தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றும் பொருட்டு நான்கு வருஷங்களாக சொல் லொனத் துன்பங்கள் அடைந்து வந்த சைனவுக்கு உதவி செய்யாமல் சுதந்திரத்தை கொள்ளையிட விரும்பும் ஜப்பா லுக்கு உதவி செய்யப் புகுந்தது ஏன் ? அதுதான் பிரிட்ட அனுடைய ராஜதர்மம்.

ஆனல் ஜப்பான் 1941 டிஸம்பர் 7-ம் தேதியன்று அமெரிக்காவுக்குச் சொந்தமான பிலிப்பைன் தீவிலுள்ள