பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

காங்கிரஸ் மந்திரிகள் ராஜிநாமா

அதன்பின் வைஸி ராய் சமஸ்தானதிபதிகளில் சிலரை யும் கட்சித் தலைவர்களில் 52 பேர்களையும் அழைத்து அரசியல் நிலைமையைக் குறித்து ஆலோசித்தார்.

ஆனல் மலே கிள்ளி எலி பிடித்த மாதிரியாக 1939ம் வருஷம் அக்டோபர் மாதம் 17ம் தேதி ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டார். அதன் சாரமாவது :

(1) இந்தியா டொமினியன் அந்தஸ்து பெறுவதே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் லட்சியம்.

(2) போர் முடிந்ததும் 1935ம் வருஷத்து அரசியல் சட்டத்தில் கண்ட சமஷ்டிப் பகுதியில் செய்ய வேண்டிய மாறுதல்களைக் குறித்து சர்க்கார் சகல கட்சியாரையும் கலந்து கொள்வார்கள்.

(3) அது வரை வைஸி ராய் தமக்கு உதவியாக முக்கிய மான கட்சிகளிலிருந்து சில பிரமுகர்களைச் சேர்த்து ஒரு ஆலோசனை சபை அமைத்துக்கொள்வார்.

இந்திய மகா ஜனங்களுடைய விருப்பம் எங்கே? இந்த அறிக்கை அளிப்பதாகக் கூறும் அரசியல் அமைப்பு எங்கே? காங்கிரஸ் மகா சபை பூரண சுதந்திரமே கேட்கிறது. அதோடு வைஸி ராய் கூறும் டொமினியன் அந்தஸ்து என்பதின் லட்சணம் யாது? அந்த அந்தஸ்தும் இந்தியாவுக்கு அளிக்கப்படும் தேதி என்ன ?

அதுதான் எங்கள் லட்சியம், அதுதான் எங்கள் விருப்பம் என்று சர்க்கார் கூறினல் மட்டும் போதுமா? * ஆயிரக்கணக்கான வருஷங்களுக்குப் பின் கிறைவேற்ற